வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஆகஸ்ட் 12
🌻🏔️🌻🏔️🌻🏔️🌻🏔️🌻🏔️🌻
🔶 இன்றைய நித்தியக்கடன்
🔶 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🔶 இன்றைய சாதகம்
🔶 செவ்வாய்கிழமை
காலை:- துரியாதீததவம்,
மாலை:- இறைநிலை தவம்.
🔶 இன்றைய நற்சிந்தனை
🔶 எல்லாவிதமான கலைகளும் மனிதர்களுக்கு சாத்தியம். ஆயக்கலை அறுபத்தி நான்கும் மனிதர்கள் கற்று தெரிந்து கொள்ள வேண்டியதேயாகும். இதில் தன்னைத்தானே உணரக்கூடிய யோகக்கலை மனிதர்கள் அனைவரும் கற்றுக்கொண்டு, வாழ்வை நிறைவாக வாழ வேண்டிய கலையாகும். இந்த கலையை கற்றால் மட்டும் தான் மற்ற கலைகள் அனைத்தும் சாத்தியமாகும்.
🔶 இன்றைய தற்சோதனன
🔶 தன்னிடத்திலே இருக்கக்கூடிய நல்லது எது? தீயது எது? என்று தெளிவாக வகைபிரித்து உணர்ந்து கொண்ட நிலையில் தீமைகளை குறைத்துக் கொண்டு, நல்லவற்றை வளர்ப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். தற்சோதனை செய்தால் மட்டும் தான் தீமைகளை குறைத்துக் கொண்டு நன்மைகளை உயர்த்திக் கொள்ள முடியும்.
🔶 இன்றைய பண்புப்பயிற்சி
🔶 எளிமையாக வாழ்ந்து அவ்வாழ்வில் நிறைவு பெறுவதற்காகவே, இந்த மனிதப்பிறவி அமைந்திருக்கிறது. எளிமையை ஏற்றுக்கொள்ளும் பண்பில் தான் இறைவனோடு இணையும் சாத்தியக்கூறுகள் அதிகமாக இருக்கிறது. எவ்வளவுக்கு எவ்வளவு எளிமையோடும், நிதானத்தோடும் செயல்படுகின்ற பண்பில் உயர்வு பெறுகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு இறைவனைப் பற்றிய ஞானம் தெளிவாக உணரப்படும் உள்ளுணர்வாக. வாழ்க வளமுடன்...
🔶 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🔶 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment