வேதாத்திரிய சிந்தனைகள் :
அவனை மறந்தால் நான் உண்டு,
அறிவு ஆறு குணங்கள் ஆகும் ;
அவனை யறிந்தால் நான் இல்லை,
அறிவே அவனாய் அன்பாகும்!
- வேதாத்திரி மகரிஷி
எங்கும் நிறைப் பரம்பொருளே எல்லாமாக, எல்லா
உயிர்களாக இருக்கின்றது என்பதை அறியாத
காரணத்தால், அல்லது அறிந்தும் அதை நினைவு
கூறாத காரணத்தால், தன்னை உயர்வாக கருதவும்,
தானே சிறந்தவன் எனும் தன்முனைப்பு எழவும்
வாய்ப்பு உள்ளது. இந்த 'நான்' எனும் தன்முனைப்பு
இறைவனை நாம் அறியமுடியாமல் தடுத்துவிடும்.
பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால்கவர்ச்சி,
உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் ஆகிய ஆறு தீய
குணங்களையும், இவற்றை செயல்படுத்த விழையும்
போது பொய், சூது, களவு, கொலை, கற்பழிப்பு எனும்
ஐந்து பெரும் பழிச் செயல்களையும் உருவாக்கிவிடும்.
அப்பரம்பொருளே அனைத்துமாகுவும், நானுமாகவும்
இருக்கிறது என்பதை உணரும்போது, அதுவே அறிவாக
இருந்து அன்பும் கருனையுமாக மாறிவிடும்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
Comments
Post a Comment