❄️⭕❄️⭕❄️⭕❄️⭕❄️⭕❄️
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*மே 01*
❄️⭕❄️⭕❄️⭕❄️⭕❄️⭕❄️
🌐 *இன்றைய நித்தியக்கடன்*
🌐 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🌐 *இன்றைய சாதகம்*
🌐 ஞாயிற்றுகிழமை
காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம்
மாலை:- இறைநிலை தவம்.
🌐 *இன்றைய நற்சிந்தனை*
🌐 வான்காந்ததோடு நம்முடைய ஜீவகாந்தமானது எப்போதும் கலந்தே இருக்கும். இதனை நாம் உணர்வதற்குரிய மனப்பக்குவம் உருவாகும் வரை, இதன் மூலமாக நமக்கு நன்மைகள் என்பது மிகவும் குறைவாகவே இருக்கும். மனதோடு வான்காந்தமும், ஜீவகாந்தமும், இணையும் முறையையும், இயங்கும் அமைப்பையும் உணர்ந்து கொண்டால் அதற்கு பின்னால் பல விதமான நன்மைகளை அனுபவமாக பெறமுடியும்.
🌐 *இன்றைய தற்சோதனை*
🌐 மனப்பக்குவம் ஒன்று மட்டுமே இறை நிலைக்கும் நமக்குமான இடைவெளியை குறைத்து, மனதிற்கும் இறைநிலைக்குமான நட்பை இணக்க தன்மையை இனிமையை காக்க வல்லதாகும். மனதை பக்குவப்பட்ட நிலையில் ஒரே மாதிரியாக எல்லா சூழ்நிலைகளிலும் இயங்கும் பண்பு நமக்குள் சிறந்து ஓங்க வேண்டும். இவ்வாறான மனப்பக்குவம் நம்மை ஆன்மீகத்தில் எல்லா அனுபவங்களும் பெறக்கூடிய தகுதியையும், தரத்தையும், உடலில், உயிரில், மனதில் உயர்த்துகிறது.
🌐 *இன்றைய பண்புப்பயிற்சி*
🌐 மனமானது பக்குவப்படாத நிலையில் துண்டுபட்டு இயங்குகிறது. பக்குவப்பட்ட நிலையில் சிதைவு இல்லாமல், பிளவு இல்லாமல், தன்மையோடும், தரத்தோடும், அறிவோடும் இணைந்து இயங்குகிறது என்ற சிறப்பான தகவலை நமக்கு வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். இந்த சிந்தனையை வாழ்க்கையின் அனுபவமாக பெறுவதற்கு, நாள் தவறாமல் பயிற்சிகளை செய்து பண்படைவோம் பயனடைவோம். வாழ்க வளமுடன்...
🌐 *குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். கிரகண நாளாக இருந்தால் கிரகண நேரத்தில் பஞ்சபூத நவகிரக தவம் செய்வது சிறப்பு. இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🌐 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🌐 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment