வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஜூலை 22
⭕➰⭕➰⭕➰⭕➰⭕➰⭕
🔰 இன்றைய நித்தியக்கடன்
🔰 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🔰 இன்றைய சாதகம்
🔰 செவ்வாய்கிழமை
காலை:- துரியாதீததவம்,
மாலை:- இறைநிலை தவம்.
🔰 இன்றைய நற்சிந்தனை
🔰 காலச் சக்கரமும் வாழ்க்கை சக்கரமும் எப்படி சுழல்கிறது? இவ்விரண்டின் இயக்கங்களுக்கு மத்தியில் தான் மனித வாழ்க்கையே தீர்மானிக்கப் படுகிறது. அப்படியானால் இந்த இரண்டு விதமான கோட்பாடுகளையும், அமைப்பையும் சரியாக புரிந்து கொண்டோமேயானால், நாம் நம்முடைய வாழ்க்கையில் எந்த குழப்பமும் இல்லாமல் சிக்கலும் இல்லாமல் வாழ முடியும். இவ்விரண்டு சக்கரத்தின் அமைப்பு ஒன்றுக்கு ஒன்று மிகச் சரியாக பொருந்த வேண்டும். அதற்கு அதனுடைய கோட்பாடை, விதியை புரிந்துகொள்ள மனிதர்களுக்கு மனப்பக்குவம் தேவை.
🔰 இன்றைய தற்சோதனன
🔰 காலச் சக்கரத்தையும் கோள்களையும் கோள்களின் அலை இயக்க அமைப்பையும் அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. வாழ்க்கை சக்கரம் மனிதனுடைய கருமையத்தில் உள்ள வினைப் பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. வினைப் பதிவுகளுக்கும் கோள்களின் அலை இயக்கத்திற்கும் இணக்கமான சூழ்நிலை அமைந்தால் அது நல்ல நேரம் என்று உணரப்படுகிறது. அதே சமயம் இணக்கமான சூழ்நிலை இல்லை என்றால் அது கெட்ட நேரம் என்று உணரப்படுகிறது. இந்த முரண்பாடுகளை கண்டறிந்த தத்துவ ஞானிகள் வேதாத்திரி மகரிஷியும், அவரை போன்ற பல ஞானிகளும், மகான்களும் கருமைத்தை தூய்மை செய்து கொள்ள வேண்டும் என்று பயிற்சி முறைகளை வகுத்துக் கொடுத்துள்ளார்.
🔰 இன்றைய பண்புப்பயிற்சி
🔰 பயிற்சியை தினந்தோறும் செய்துகொண்டு நம்முடைய எண்ணம், சொல், செயல் இவைகளை ஒன்றுக்கு ஒன்று முரண்படாமல் உபயோகப்படுத்தி இயற்கைக்கு முரண்படாமல், வாழ்வை வாழும்போது நமக்கு எல்லா நேரமும் நல்ல நேரமாகவே அமையும். விலங்கின பதிவுகள் கருமையத்தில் இருக்கும்வரை பழக்கத்திற்கும், விளக்கத்திற்கும் இடையே போராட்டம் என்பது இருந்துகொண்டே தான் இருக்கும். ஆக விலங்கின பதிவுகளை போக்கிக் கொண்டு ஆறாவது அறிவில் முழுமை பெறுவோம். வாழ்க வளமுடன்...
🔰 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🔰 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment