வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஜூன் 22
🔥♻️🔥♻️🔥♻️🔥♻️🔥♻️🔥
🪻 இன்றைய நித்தியக்கடன்
🪻 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🪻*இன்றைய சாதகம்*
🪻 ஞாயிற்றுகிழமை
காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம்
மாலை:- இறைநிலை தவம்.
🪻 இன்றைய நற்சிந்தனை
🪻 மனிதனுக்குள் இருக்கும் உயிர் துகள்களானது, பலவிதமான ரகசியங்களையும், நடந்து முடிந்த அனைத்து வரலாற்று உண்மைகளையும் தனக்குள் புதைத்து வைத்திருக்கிறது. நடந்து முடிந்த அனைத்து வரலாற்று உண்மைகளுக்கும் உயிர்துகள்கள் ஒரு சாட்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறது. எவர் வேண்டுமானாலும் முயற்சி செய்து உயிருக்குள் புதைந்திருக்கும், பிரபஞ்ச தன்மாற்றம் ரகசியங்களை தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும். இதற்கு ஒரே ஒரு வழி மட்டும் தான் இருக்கிறது. உயிருக்குள் ஒடுங்கி உயிரை கடந்து நின்று வாழ்ந்து பழக வேண்டும்.
🪻 இன்றைய தற்சோதனன
🪻 மனித உடலுக்குள் இந்த உயிர் துகள்களானது சிறப்பான பண்புகளை, உள்ளடக்கிக் கொண்டு பல வேலைகளை செய்து கொண்டிருக்கின்றது. உடலை இயக்குவது உயிரின் முதல் வேலையாகும். அந்த இயக்கத்திற்கு ஏதேனும் தடை ஏற்பட்டால் அந்த தடைகளை சரி செய்வது உயிரின் இரண்டாவது வேலையாகும். இந்த மனித உடலை பயன்படுத்தி உயிர் தன்னுடைய மூலத்தை சென்று சேர்வதற்கான வேலைகளையும் செய்கிறது. இந்த மூன்றாவது வேலையை குண்டலினி யோகிகளால் மட்டுமே உயிருக்கு அமைத்துக் கொடுக்க முடியும்.
🪻 இன்றைய பண்புப்பயிற்சி
🪻 உடலை இயக்குவதிலும், தடைகளை நீக்குவதிலும், உயிர் தன்னுடைய ஆற்றலை இதற்கே செலவிட்டு விடுகிறது. தியானப் பயிற்சியில் ஈடுபடும் ஒருவர் தன் தேவைகளை முறைப் படுத்திக் கொண்டு எண்ணம், சொல், செயல்களால் பிழைகள் செய்யாமலும், பிழைகளை நீக்கிக் கொண்டும் வாழும் போது தன்னுடைய, மூலத்தை நோக்கிய பயணத்தில் உயிர் துகள்களுக்கு முனைப்பு ஏற்படுகிறது. உயிருக்கு ஒத்த முறையில் நம் பழக்க வழக்கங்களை மாற்றி அமைத்துக் கொண்டு, உயிருக்கான வாழ்க்கையை வாழத் துவங்குவோம். வாழ்க வளமுடன்...
🪻 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🪻 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment