நித்தியக்கடன் ஜூன் 21 2025

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

ஜூன் 21 


🔰🌀🔰🌀🔰🌀🔰🌀🔰🌀🔰


🍁 இன்றைய நித்தியக்கடன்


🍁 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக. 


🍁 இன்றைய சாதகம் 


🍁 சனிக்கிழமை காலை:- சாந்தி தவம் மாலை:- நித்தியானந்த தவம்.


🍁 இன்றைய நற்சிந்தனை 


🍁 ஒரு பொருளை பார்ப்பதற்கு கண்கள் தேவை, ஒரு வாசனையை நுகர்வதற்கு மூக்கு தேவை, ஒரு ஓசையை கேட்பதற்கு காது தேவை, ஒரு சுவையை உணர்வதற்கு நாக்கு தேவை, ஸ்பரிசத்தை உணர்வதற்கு தோல் தேவை இவைகளின் வழியாகத்தான் நம் வாழ்க்கை அனுபவங்கள் ஏற்படுகிறது. இந்த புலன்கள் இல்லாமல் நம் வாழ்க்கை இல்லை. இருந்தபோதும் இந்த புலன்களை, புலன் அனுபவங்களை கடந்து, அறிவின் வழியாக அனைத்தையும் உணர்ந்து, தெளிந்து வாழ்க்கையை சிறப்பாக, நிறைவாக வாழ வேண்டும்.


🍁 இன்றைய தற்சோதனன


🍁 புலன்களை புரிந்து கொள்ளாமல் புலன்களை அடக்க முடியாது. இந்த விதியும் கோட்பாடும் எல்லாவற்றுக்கும் பொருந்தும். பணத்தை புரிந்துகொள்ளாமல் பணத்தை கடக்க முடியாது. பசியை புரிந்து கொள்ளாமல் பசியை அடக்க முடியாது. ஆசையை புரிந்து கொள்ளாமல் ஆசைகளை அடக்க முடியாது. தேவைகளை புரிந்து கொள்ளாமல் தேவைகளை கடக்க முடியாது. தற்சோதனை இல்லாமல் பொருள், புகழ், அதிகாரம், புலன் இன்பம் எதையுமே புரிந்து கொள்ள முடியாது, அதை கடக்கவும் முடியாது. "தற்சோதனையே நம்மை நாம் செதுக்கும் உளியாகும்"


🍁 இன்றைய பண்புப்பயிற்சி


🍁 சின்னதாக, மெல்லியதாக, மெதுவாக துவங்குவோம். நம்மை நாமே செதுக்குவதற்கு, பண்பில் உயர்வதற்கு‌‌ நம்முடைய எண்ணம், சொல், செயல்களை ஒழுங்குபடுத்திக் கொள்வோம். நம்முடைய பார்வையை ஒழுங்கு படுத்திக் கொள்வோம், நம்முடைய சுவை உணர்வை ஒழுங்கு படுத்திக் கொள்வோம் சிறிது, சிறிதாக இவற்றிலெல்லாம், தற்காலத்தில் எவ்வளவு முடியுமோ, எதில் முடியுமோ, அவற்றிலெல்லாம் முயற்சி செய்வோம். காலம் கனியட்டும், களம் அமையட்டும், அந்த ஆற்றல் களத்தில், முயற்சியின் குவியலில் நின்றுகொண்டு நாளை பெரியதாக ஞானம் செய்வோம். வாழ்க வளமுடன்...   

          

🍁 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🍁 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 


      🌸வாழ்க வையகம்🌸

   🍁வளர்க வேதாத்திரியம்🍁

      🌸வாழ்க வளமுடன்🌸

Comments