வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஆகஸ்ட் 10
🏮🌸🏮🌸🏮🌸🏮🌸🏮🌸🏮
🔰 இன்றைய நித்தியக்கடன்
🔰 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🔰 இன்றைய சாதகம்
🔰 ஞாயிற்றுகிழமை
காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம்
மாலை:- இறைநிலை தவம்.
🔰 இன்றைய நற்சிந்தனை
🔰 மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான தன்மையும், தரமும், திறமும் இருக்கிறது. இதனுடைய அடிப்படையில் தவம், காயகல்பம், உடற்பயிற்சி, தற்சோதனை இவை அனைத்திலும் அவர் அவர்களுக்கு அனுபவங்கள் வேறுபடும். ஒரு செயல் எல்லோருக்கும் ஒரே விதமான அனுபவத்தை கொடுக்குமா? என்றால் இல்லை. நிச்சயமாக மாறுபடத்தான் செய்யும்.
🔰 இன்றைய தற்சோதனன
🔰 நோக்கம், காலம், தேவை, தொடர்பு கொள்ளும் பொருள், இடம், கருவமைப்பு தன்மை மாறுவதால் செயலுக்குத் தக்க விளைவு என்பது பல்வேறு வகையாக அமைகிறது. ஒரே மாதிரியான விளைவுகள் உருவாவது இல்லை. அது விஞ்ஞானத்திற்கும், மெய்ஞானத்திற்கும் பொருந்தும். வைராக்கியத்தோடு தற்சோதனை செய்து இந்த எதார்த்த உண்மைகளோடு இணைவோம்.
🔰 இன்றைய பண்புப்பயிற்சி
🔰 எதுவெல்லாம் என்னுடையது என்று எண்ணுகின்றோமோ, அது எதுவுமே நம்முடையது அல்ல. அனைத்து அனுபவங்களும் அனுபவங்களாக வருவதும் இறைநிலையின் தன்மாற்றமே. இறைவனே எல்லாமுமாக மாறி இருக்கும் போது, இது என்னுடையது என்று சிந்திக்க எதுவுமே இல்லை. இந்த விரிவான மனோநிலையையும் பண்பையும் எளிதாக சிந்தித்து உணர்ந்து கொள்ளும் வாழ்க்கையே ஞான வாழ்க்கை. வாழ்க வளமுடன்...
🔰 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🔰 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment