🔳⭕🔳⭕🔳⭕🔳⭕🔳⭕🔳
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*மே 28*
🔳⭕🔳⭕🔳⭕🔳⭕🔳⭕🔳
❄️ *இன்றைய நித்தியக்கடன்*
❄️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
❄️ *இன்றைய சாதகம்*
❄️ புதன்கிழமை
காலை:- ஒன்பது மையம்,
மாலை:- நித்யானந்தம்.
❄️ *இன்றைய நற்சிந்தனை*
❄️ இந்த உலகத்திலேயே மிகவும் சிறப்புமிக்கது உணவாகவும், மருந்தாகவும் இருக்கிறது. அது பூக்களில் இருந்து எடுக்கப்படும் தேன். தேனீக்கள் மூலமாக எல்லாவகையான பூக்களிலிருந்து சேகரிக்கக் கூடிய தேன் மிகச்சிறந்த மருந்தாகும். கலப்படமில்லாத தேன் போல மிகச் சிறந்த மருந்து எதுவும் இல்லை.
❄️ *இன்றைய தற்சோதனன*
❄️ இந்த தேனை போல நம் உடலில் இருக்கக்கூடிய சீவ வித்துக் குழம்பும் மிகச்சிறந்த பொருளாகும். இதனை ஜீவகாந்தத்தைக் கொண்டு செரிவூட்ட செரிவூட்ட இந்த பிரபஞ்ச நிலைகள் அனைத்தையும், சிந்தித்து உணர்ந்து அனுபவமாக்கிக் கொள்ள நமக்குள் இருக்கும் அற்புதமான பொருள் சீவ வித்துக் குழம்பு.
❄️ *இன்றைய பண்புப்பயிற்சி*
❄️ ஐந்தில் அளவு முறை காக்கப்படும் போது நம் உடலில் சீவகாந்தம் திணிவு பெறுகிறது, உயிர் துகள்களில் அது சேகரிக்கப்படுகிறது. இது உயிர்த் துகள்களின் ஆற்றலையும், திறனையும் அதிகரிக்கிறது. சீவ வித்துக் குழம்பை தூய்மைசெய்து மனத்தூய்மையும், வினைத்தூய்மையும் பெற்று பிரம்ம நிலையை அனுபவம் ஆக்கிக்கொள்வோம். தூய்மை என்னும் பண்பில் எல்லா வகையிலும் சிறந்து விளங்குவோம். வாழ்க வளமுடன்...
❄️ *குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
❄️ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment