🔲🌻🔲🌻🔲🌻🔲🌻🔲🌻🔲
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*மே 20*
🔲🌻🔲🌻🔲🌻🔲🌻🔲🌻🔲
🌿 *இன்றைய நித்தியக்கடன்*
🌿 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🌿 *இன்றைய சாதகம்*
🌿 செவ்வாய்கிழமை
காலை:- துரியாதீததவம்,
மாலை:- இறைநிலை தவம்.
🌿 *இன்றைய நற்சிந்தனை*
🌿 தொலைகாட்சி, பத்திரிக்கை, சமூக வலைதளங்கள் மூலமாக அவர் அவர்களுக்கு தெரிய வரும் செய்திகளை ஏற்றுக் கொள்பவர்கள், மறுப்பவர்கள், கண்டும் காணாமல் இருப்பவர்கள் என்று மூன்று விதமான கருத்துடைய மக்கள் உலகம் முழுவதும் வாழ்கிறார்கள். எது எப்படியானாலும் நாம் ஆய்வு செய்யாமல் எதையும் மறுப்பதும், ஏற்பதும், அமைதியாக இருப்பதும் மிகப்பெரும் வாழ்வியல் தவறாகும். இவைகளை எல்லாம் தெளிவாக தெரிந்து கொண்டு, நான் என்ன செய்யப் போகிறேன்? இதனால் எனக்கு என்ன லாபம்? என்று பலர் எண்ணுகிறார்கள்.
🌿 *இன்றைய தற்சோதனன*
🌿 நிறைய லாபங்கள் இருக்கின்றது. எந்த ஒன்றும் எந்த ஒரு சிந்தனையும் மாண்டு விடப்போவதில்லை. நம்முடைய காலத்திற்கு பின், அந்த சிந்தனைகள் உயிரோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கும். நம்முடைய முன்னோர்கள் சிந்தித்து ஆய்வு செய்து, கண்டறிந்த உண்மைகளில் தான் நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவர்கள் ஆய்வு செய்யவில்லை என்றால் நமக்கு இன்று கிடைத்திருக்கும், அனைத்து விஞ்ஞான பயன்பாடுகளும் எதுவுமே இல்லாமல் போயிருக்கும்.
🌿 *இன்றைய பண்புப்பயிற்சி*
🌿 நாம் இன்று சிந்தித்து பெறக்கூடிய தெளிவுகளும், உண்மைகளும் நம்முடைய அடுத்த சந்ததிகளுடைய வாழ்க்கையின் அடித்தளமாக அமையும் என்பதுதான் உண்மை. அவர்களுக்கு நாம் உண்மையில் சேர்த்து வைக்கும் சொத்து என்பது இது மட்டும் தான். இவ்வளவு பெரிய லாபம் என்பது நாம் சிந்தித்து தெளிவாக நம்முடைய மனதை வைத்துக் கொள்ளும் முறையில் அமைகிறது. இந்த இயற்கை உண்மையை போற்றுவோம், வாழ்த்துவோம், இயற்கையோடு இணைந்து வாழ்வோம். வாழ்க வளமுடன்...
🌿 *குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🌿 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment