நித்தியக்கடன் ஜூன் 18 2025

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

ஜூன் 18


💢🏔️💢🏔️💢🏔️💢🏔️💢🏔️💢


💦 இன்றைய நித்தியக்கடன்


💦 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக. 


💦 இன்றைய சாதகம் 


💦 புதன்கிழமை 

காலை:-  ஒன்பது மையம், 

மாலை:- நித்யானந்தம்.


💦 இன்றைய நற்சிந்தனை 


💦 இந்த பூமியில் தோன்றுகின்ற மகான்களும், ஞானிகளும், சித்தர்களும், அவரவர்களுடைய காலகட்டத்திற்கு ஏற்ப இயற்கையை விரிவாக்கம் செய்து கொடுத்திருக்கிறார்கள். அவர்களை தொடர்ந்து வரக்கூடிவர்களும் இதைனையே செய்வார்கள். அந்த விரிவாக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தன்னுடைய சிந்தனையை, வாழ்வியல் முறையை மேன்மைப்படுத்திக் கொள்ள வேண்டியது மனிதர்களாக, பிறந்து இருக்கக்கூடிய ஒவ்வொருவருடைய கடமையும் பொறுப்புமாகும். தான் உணர்ந்தவற்றை  மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வது இயற்கையினுடைய சிறப்பு இயக்க உணர்வாகும்.


💦 இன்றைய தற்சோதனன


💦 இயற்கையினுடைய அமைப்பை, இறைவனை முழுமையாக உணர்ந்து சொன்னவற்றை ஏற்றுக் கொண்டு வாழ்பவர்களும் இருக்கிறார்கள், ஏற்றுக்கொள்ளாதவர்களும் இருக்கவே செய்வார்கள். அவர்கள் அடுத்த காலகட்டத்தில் இந்த கோட்பாட்டில் இயற்கையின் உடைய நீதியின்படி இணைக்கப்படுவார்கள். ஏற்பவர்களும், மறுப்பவர்களும் கலந்தே இந்த மனித சமுதாயம் இப்பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஒழுக்கத்தை அடிப்படையாகக் கொண்டதே மனித பிறவியின் அமைப்பாகும். இதனை நன்றாக தற்சோதனை செய்து பாருங்கள்.


💦 இன்றைய பண்புப்பயிற்சி


💦 தன்னைத் தானே மதித்தலும் மற்றவர்களை மதித்து நடத்தலும் ஒழுக்கமாகும். இந்த ஒழுக்கத்தை பின்பற்ற கூடிய பண்பில் நாளுக்கு நாள் உயர்வு பெற வேண்டும். விலங்கினத்தில் இருந்து இந்த மனித சமுதாயம் வித்து தொடராக வந்திருக்கிறது. விலங்கினத்தில் இருக்கும் செயல் பண்புகள் நம்மிடையே அவ்வப்போது வெளிப்படத்தான் செய்யும். இருப்பினும் அதையும் தாண்டி நாம் ஒழுக்க நெறியோடு வாழும் பண்பில் உயர வேண்டும் உயர்வோம், வாழ்வோம். வாழ்க வளமுடன்...  

          

💦 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


💦 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 


      🌸வாழ்க வையகம்🌸

   🍁வளர்க வேதாத்திரியம்🍁

      🌸வாழ்க வளமுடன்🌸


Comments