வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஜூன் 16
🎯🔰🎯🔰🎯🔰🎯🔰🎯🔰🎯
🧊 இன்றைய நித்தியக்கடன்
🧊 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🧊 இன்றைய சாதகம்
🧊 திங்கட்கிழமை
காலை:- கண்ணாடிப் பயிற்சி,
பஞ்சேந்திரிய தவம்,
மாலை:- நித்யானந்த தவம்.
🧊 இன்றைய நற்சிந்தனை
🧊 "கொண்டு வந்த பாவம் தொண்டு செய்தால் தீரும்" என்பது மேல் பதிவு. இந்த பதிவை நீங்கள் தாராளமாக ஏற்படுத்திக் கொள்ளலாம் ஏற்படுத்திக் கொள்ள தான் வேண்டும். ஆனால் பாவம் தீர நான் தொண்டு செய்கிறேன் என்ற எண்ணத்தை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள். என் பாவத்தை தீர்ப்பதற்காக தொண்டு செய்கிறேன் என்ன எண்ணம் தயவு செய்து வேண்டாம். தொண்டு செய்வது என்கடமை என்று ஏற்றுக்கொண்டு தொண்டு செய்யுங்கள். கடமை உணர்வோடும், கருதுயர்வோடும், குருவருளோடும், இறையருளோடும் நிறைவாக வாழுங்கள்.
🧊 இன்றைய தற்சோதனன
🧊 தெளிவான சிந்தனை ஓட்டம் நமக்கு மிகவும் முக்கியம். மாயையிலிருந்து மயக்கத்திலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள். தான் மயங்கியும் பிறரை மயக்கியும் வாழும் போது நம் அறிவு ஒருபோதும் ஒருநாளும் உயரவே உயராது. எதிலேயும் விழிப்பு நிலையோடு இருந்து எல்லையில்லா பேரறிவில் கலந்து நிறைவான வாழ்க்கைக்கு உங்களையும் உங்கள் சந்ததிகளையும் தயார் செய்யுங்கள்.
🧊 இன்றைய பண்புப்பயிற்சி
🧊 எவ்வளவு வசதி வாய்ப்புகள் இருந்தாலும் எவ்வளவுதான் அறிவில் நாம் உயர்ந்தாலும், நாம் பெற வேண்டியதும் இச்சமுதாயத்திற்கு கொடுக்க வேண்டியதும் இறுதி நேரம் வரை இருந்து கொண்டேதான் இருக்கும். விரிந்த மனதோடு தெளிந்த அறிவோடு இவ்வுண்மையை ஏற்றுக்கொண்டு வாழும் பண்பில் உயர்வோம். வாழ்க வளமுடன்...
🧊 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🧊 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment