வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஜூன் 15
🌾🕸️🌾🕸️🌾🕸️🌾🕸️🌾🕸️🌾
🌸 இன்றைய நித்தியக்கடன்
🌸 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🌸 இன்றைய சாதகம்
🌸 ஞாயிற்றுகிழமை
காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம்
மாலை:- இறைநிலை தவம்.
🌸 இன்றைய நற்சிந்தனை
🌸 "வர்ணாசிரம தர்மம்" சூத்திரர், வைத்தியர், பிராமணர், சத்திரியர் இந்த நான்கு வர்ணங்கள் மட்டுமே முதலில் உருவாக்கப்பட்டதாகும். இதில் சூத்திரர் பொருள்களை உற்பத்தி செய்பவர்கள், வைஸ்த்தியர் பொருள்களை வியாபாரம் செய்பவர்கள், பிராமணர் வேதங்களையும், மந்திரங்களையும், ஓதுபவர்கள் சத்திரியர் தன்னையும் தன் நாட்டு மக்களையும் காப்பாற்றுபவர்கள். இந்த வர்ணாசிரம தர்மம் இன்று எல்லோருக்கும் பொருந்தும்.
🌸 இன்றைய தற்சோதனன
🌸 இன்ன சாதி இன்ன மதம் என்ற பிரிவு இல்லாமல் எல்லோரும் பொருள் உற்பத்தி செய்கிறார்கள், அதை வியாபாரம் செய்கிறார்கள், வேதங்களையும் மந்திரங்களையும் படித்திருக்கிறார்கள். தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளக் கூடிய சத்திரியர்களாகவும் இருக்கிறார்கள். அவர் அவர்கள் செய்கின்ற தொழிலை வைத்தே அவர்கள் இன்ன சாதி என்று பெயரிட்டு அழைக்கப் பட்டிருக்கிறார்கள்.
🌸 இன்றைய பண்புப்பயிற்சி
🌸 இந்த விரிவான சிந்தனையில் தெளிவாக முடிவெடுத்து ஜாதி மதம் என்ற தன்மைகளிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்வோம். ஆழமாக தற்சோதனை செய்யுங்கள். இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் வளர்ந்த பின்பு கூட என்ன சாதி மதம் என்று பேசுவதில் சிறிதும் ஞாயம் கிடையாது. இன்றைய காலகட்டத்தில் எல்லோரும் எல்லாத் தொழிலையும் செய்கிறார்கள். அப்படி பார்த்தால் இந்த வர்ணாசிரமதர்மம் இன்று எல்லோருக்கும் பொருந்தும்.
🌸 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🌸 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment