வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஜூன் 14
⛳🍁⛳🍁⛳🍁⛳🍁⛳🍁⛳
🌀 இன்றைய நித்தியக்கடன்
🌀 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🌀 இன்றைய சாதகம்
🌀 சனிக்கிழமை காலை:- சாந்தி தவம் மாலை:- நித்தியானந்த தவம்.
🌀 இன்றைய நற்சிந்தனை
🌀 பருவுடல், நுண்ணுடல், காந்த உடல் இந்த மூன்று உடல்களின் சரியான புரிதலோடு பயிற்சியை நாள் தவறாமல் செய்யும் போதுதான், வேதாத்திரியத்தின் உண்மையான விஞ்ஞானம் வாழ்க்கையாக மலரும். இந்த வாழ்க்கை விஞ்ஞானத்தை இந்த மூன்று உடல்களின் அடிப்படையில் இந்த பயிற்சிகள் எவ்வாறு இறை நீதியோடு இயங்குகிறது, என்ற புரிதலோடு செயல் புரிந்து வாழும்போதுதான் அனைத்து இயக்க அமைப்புகளும், நம் அறிவில் தெளிவாக விளங்கும்.
🌀 இன்றைய தற்சோதனன
🌀 பல்வேறு விதமான கோட்பாடுகளை உள்ளடக்கமாக கொண்டது வேதாத்திரியம். இதனை சரிவர புரிந்து கொள்ளாமல், அதனுடைய விஞ்ஞானத்தை உணர்ந்து கொள்ளாமல், உடலை அசைப்பதோ, மனதை அசைகாமல் வைத்திருக்க முயற்சிப்பதோ, உயிரோடு இணைந்து வாழ எண்ணுவதோ விழிப்பு நிலை ஆகாது. இதனுடைய விஞ்ஞானத்தையும், கோட்பாட்டினையும் எல்லா வகையிலும் தற்சோதனை செய்து விரிவாகவும், தெளிவாகவும் விளங்கிக் கொள்ளுங்கள்.
🌀 இன்றைய பண்புப்பயிற்சி
🌀 மனித உடல் முழுவதும் அனுக்களால் ஆக்கப்பட்டது. நம்முடைய உடலுக்குள் நடைபெறக்கூடிய நிகழ்ச்சி இதுதான். ஒன்று அணுச்சேர்க்கை, மற்றொன்று அணுச்சிதைவு. இந்த நிகழ்ச்சிகள் எதனால் நடைபெறுகிறது, இதனுடைய கோட்பாடு என்ன? என்பதை புரிந்துகொண்டு விட்டால், அனு சேர்க்கையை ஏற்படுத்திக் கொள்ளவும் முடியும், அணுச்சிதைவு தடுக்கவும் முடியும். இதற்கு தேவையானதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் நாம் செய்யும் பயிற்சி மீதும், குருவின் மீதும் நம்பிக்கை. இந்த நம்பிக்கைக்குள் உங்களை ஆழமாக புதைத்துக் கொள்ளுங்கள். இந்த பண்பு இறை நிலை வரை அனைத்தையும் விரிவாகவும், தெளிவாகவும், உணர்த்தும். வாழ்க வளமுடன்...
🌀 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🌀 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment