நித்தியக்கடன் மே 13 2025

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

மே 13


🏮🏔️🏮🏔️🏮🏔️🏮🏔️🏮🏔️🏮


⛳ இன்றைய நித்தியக்கடன்


⛳ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக. 


⛳ இன்றைய சாதகம் 


⛳ செவ்வாய்கிழமை 

காலை:- துரியாதீததவம், 

மாலை:- இறைநிலை தவம்.


⛳ இன்றைய நற்சிந்தனை 


⛳ சிந்தனை, சிக்கனம், சீர்திருத்தம் தற்போதைய காலச் சூழ்நிலைக்கு இது நமக்கு மிகப்பெரிய படிப்பினையை கொடுக்கக் கூடியதாகும். மேலும் இவைகள்தான் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற வார்த்தைக்கு சரியான செயல் பயிற்சியாகும். இந்த செயல் பயிற்சியில் தன்னார்வத்தோடு ஒவ்வொருவரும் தங்களை தாங்களே ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்த மனித சமுதாயம் பிழைகளில் இருந்து, தன்னை சீர்திருத்தத்தை நோக்கி நகர்த்தி கொள்ளவும், அதற்கு தகுந்த மனோதிடத்தை வளர்த்து கொள்ளவும் முடியும்...


⛳ இன்றைய தற்சோதனன


⛳ சிந்திக்க சிந்திக்க தான் நம்மிடம் இருக்கக்கூடிய நன்மைகள் என்ன? தவறுகள் என்ன? குறைகள் என்ன? தீமைகள் என்ன? என்று நம்மால் இனம் கண்டுகொள்ள முடியும். சிந்திக்கத் தொடங்கிய நாள் முதற்கொண்டு இந்த மனித சமுதாயம் விஞ்ஞானத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. பலமாக ஈடு இணை இல்லாமல் இன்று வளர்ந்து வானளாவிய உயரத்தில் விஞ்ஞானம் நிற்கிறது. விஞ்ஞானத்தோடு சேர்ந்து மெய்ஞானமும் வளர்ந்திருக்க வேண்டும். வெறும் விஞ்ஞானம் மட்டுமே வளர்ந்த காரணத்தால் இதனை முறையான வளர்ச்சி என்று சொல்வதற்கு இல்லை.


⛳ இன்றைய பண்புப்பயிற்சி


⛳ இது ஒரு விதமான வீக்கம்... நம்முடைய உடல் பகுதியில் ஒரு கை மட்டும் வளர்ந்து கொண்டே போகிறது, அல்லது ஒரு கால் மட்டும் வளர்ந்து கொண்டே போகிறது, இது எப்படி இருக்கும் என்று நீங்களே சிந்தித்து பாருங்கள். உடல் முழுவதும் சமச்சீரான வளர்ச்சி தேவை. அதுதான் விஞ்ஞான மெய்ஞான வளர்ச்சியாகும். இவ்வளர்ச்சிக்கு நாம் இன்று வித்தாக வாழ்ந்து காட்டுவோம். நாளைய சமுதாயம் மெய்ஞானத்தில் சமச்சீரான வளர்ச்சியில் வாழ்வதற்காக, நாம் இன்று விதையாக மாறுவோம். வாழ்க வளமுடன்...            


⛳ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


⛳ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 


      🌸வாழ்க வையகம்🌸

   🍁வளர்க வேதாத்திரியம்🍁

      🌸வாழ்க வளமுடன்🌸

Comments