உடல் நோயைத் தணித்து வாழும் முறையை அறிவோம்!
"நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்" என்கிறார் திருவள்ளுவர்
பொருள், புகழ், அதிகாரம், புலனின்பம் நான்கிற்கும் பேராசைப்பட்டு உண்ணுதல், உழைத்தல்,உறங்குதல்,உடலுறவு கொள்ளல், எண்ணுதல் ஆகிய ஐந்து செயல்களில் சீவகாந்தசக்தியை (உயிர்ச்சக்தியை) உடல் தாங்கும் அளவுக்கு மேல் செலவழிக்கும் போதும், சுற்றுப்புறச்சூழல், சந்தர்ப்ப மோதல்,கோள்களின் சஞ்சாரம்,கருவமைப்பு(முன்னோர் வினை)காரணமாகவும் எல்லோருக்கும் உடலில் இரசாயனக் குழப்பம் ஏற்படும். இதனால் உடலில் கழிவுகள் தேங்கி உயிரோட்டத்திற்குத் தடையை ஏற்படுத்தும்.உயிரோட்டத்திற்கு ஏற்படும் இத்தடையே வலி.நீடித்தவலியே நோய்.
நோயோடு வாழும் போது பொருள் ஈட்டும் தொழில் செய்யவோ, புலன் இன்பங்களைத் துய்க்கவோ, பிறருக்கு உதவவோ முடியாது.உடலுக்கு வரும் நோயை உடனடியாகவும் போக்க முடியாது.கொஞ்சமாவது அனுபவித்துத் தான் போக்க முடியும்.
உடலுக்கு உடற்பயிற்சியும், உயிருக்கு காயகல்பப் பயிற்சியும் மனத்துக்கு தியானப் பயிற்சியும் அளித்து,சீவ இரசாயனங்களின்(Biochemicals )அளவு மற்றும் தரத்தை சீராக பராமரித்து நோய் எதிர்ப்புச்சக்தியைக் கூட்டிக்கொண்டு,
உடலுக்கு வரும் நோயை எளிதாகத் தணித்து வாழும் வாழ்க்கை முறையை(Method off living)அறிய அருகிலுள்ள அறிவுத்திருக்கோயிலை தொடர்பு கொள்வீர்!
வாழ்க வேதாத்திரியம் வாழ்க வளமுடன்
Comments
Post a Comment