நித்தியக்கடன் ஏப்ரல் 30 2025

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

ஏப்ரல் 30


🪻🌾🪻🌾🪻🌾🪻🌾🪻🌾🪻


🕸️ இன்றைய நித்தியக்கடன்


🕸️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக. 


🕸️ இன்றைய சாதகம் 


🕸️ புதன்கிழமை 

காலை:-  ஒன்பது மையம், 

மாலை:- நித்யானந்தம்.


🕸️ இன்றைய நற்சிந்தனை 


🕸️ இயற்கையினுடைய ஒருங்கிணைந்த இயக்கம் எதுவெல்லாம் எப்போதெல்லாம் நடைபெற வேண்டும் என்ற சீரிய திட்டத்தோடு எல்லாமாக இருந்து இயங்கிக் கொண்டிருக்கிறது இயற்கை. இந்த இயற்கையில் ஒரு பகுதிதான் மனித இனம் இந்த மனித இனத்திற்கு என்று சில விதிகளும், கோட்பாடுகளும் இருக்கின்றன அவைகளில் அளவுமுறை மீறாத வரை இயற்கை எல்லா வகையிலும் நமக்கு பாதுகாப்பாகவே இருக்கும் எப்போது அளவுமுறை மீறப்படுகிறதோ, அப்போதே மனிதருடைய பாதுகாப்பு சிதைவடைகிறது.


🕸️ இன்றைய தற்சோதனன


🕸️ ரசாயனமில்லாத மண்ணும் அம் மண்ணில் விளையும் உணவுப் பொருள்களும், மாசு இல்லாத காற்று. உணவு சங்கிலி, வாழ்க்கை சங்கிலி, ஜீவ இன சங்கிலி, தொழில் சங்கிலி என்று அனைத்து அடிப்படைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் மனிதர்களால். அப்போதுதான் பருவகால மாற்றங்கள் சீராக இயக்கம் பெறும். இயற்கை மாசு படுத்தி விட்டு இயற்கை என்னை காப்பாற்றவில்லை இயற்கைக்கு என்மீது கருணையே இல்லையா? என்றால் அதற்கு இயற்கையிடம் ஒரே ஒரு பதில்தான் இருக்கிறது, "வினை விதைத்தால் வினை அறுக்கலாம் திணை விதைத்தால் திணை அறுக்கலாம்"


🕸️ இன்றைய பண்புப்பயிற்சி


🕸️ இயற்கையின்னுடைய விதிகளை மனிதர்கள் மதிக்க வேண்டும் இந்த விதி மீறல் எப்போதெல்லாம் நடைபெறுகிறதோ, அப்போதெல்லாம் இயற்கையும் கொஞ்சம் மாறுபடுகிறது, வேறுபடுகிறது. இயற்கையோடு இணைந்த வாழ்க்கைக்கு மனிதர்கள் தயாராகவேண்டும். உங்களை தயார்படுத்திக் கொள்வதற்காகவே மனவளக்கலை நான்குவிதமான கட்டமைப்புகளோடு உருவாக்கப் பட்டிருக்கிறது. இந்த கட்டமைப்புகளை நாள் தவறாமல் பயன்படுத்தி நாளைய சமுதாயத்தை உயிர்ப்பு தன்மையோடு வாழச் செய்வோம். வாழ்க வளமுடன்...         


🕸️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🕸️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 


      🌸வாழ்க வையகம்🌸

   🍁வளர்க வேதாத்திரியம்🍁

      🌸வாழ்க வளமுடன்🌸

Comments