வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஏப்ரல் 29
🎱🌸🎱🌸🎱🌸🎱🌸🎱🌸🎱
🌿 இன்றைய நித்தியக்கடன்
🌿 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🌿 இன்றைய சாதகம்
🌿 செவ்வாய்கிழமை
காலை:- துரியாதீததவம்,
மாலை:- இறைநிலை தவம்.
🌿 இன்றைய நற்சிந்தனை
🌿 எப்போதும், எங்கேயும், எவறொருவரோடும், எந்த ஒரு புற அக நிகழ்ச்சி யோடும் கருத்து மோதல்களை வேறுபாடுகளை உருவாக்கிக் கொள்ளாதீர்கள். இது ஒரு போதும் நம்முடைய வளர்ச்சிக்கு உதவப் போவது இல்லை. எதிர்மறையான சிந்தனைகளை வைத்துக் கொண்டு எவர் ஒருவரோடும் நல்ல நட்பு நிலையை உருவாக்கிக் கொள்ள முடியாது. வாழ்த்துங்கள்! வாழ்வார்கள்! நாமும் வாழ்வோம்!
🌿 இன்றைய தற்சோதனன
🌿 "நமக்கு வீரியம் பெரிதல்ல, காரியமே பெரிது" சரியான காலத்திற்காக நாம் காத்திருக்கிறோம். இதற்கு இயற்கையோடும் சக நண்பர்களுடன் நல்ல நட்பு நிலை இருந்தால் மட்டும்தான் நம்மால் சாதிக்க முடியும். எல்லாத் துறையிலும், எல்லா நிலையிலும் இதனை நன்றாக தற்சோதனை செய்து தெளிவான சிந்தனையோடு அடுத்த நகர்வுகளை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
🌿 இன்றைய பண்புப்பயிற்சி
🌿 எல்லோரோடும், இன்முகத்தோடும், எளிமையோடும் வாழக்கூடிய பண்பில் உயர்வு பெற வேண்டும். இந்த பண்பு ஒன்று தான் நமக்கான ஞானத் தேடலை ஞான தளத்தை உருவாக்கி தரும். செயலுக்குத் தக்க விளைவு என்பது நிச்சயம் உண்டு. சரியான விளைவுகளை தீர்மானித்துக் கொண்டு திட்டமிட்டு செயலாற்றும் அறிவு நுட்பத்தை, அந்த பண்பை வளர்த்துக் கொள்வோம். வாழ்க வளமுடன்...
🌿 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🌿 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment