நித்தியக்கடன் ஏப்ரல் 27 2025

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

ஏப்ரல் 27


🔥🟣🔥🟣🔥🟣🔥🟣🔥🟣🔥


🔰 இன்றைய நித்தியக்கடன்


🔰 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக. 


🔰 இன்றைய சாதகம் 


🔰 ஞாயிற்றுகிழமை 

காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம் 

மாலை:- இறைநிலை தவம்.


🔰 இன்றைய நற்சிந்தனை 


🔰 ஒரு விதைக்குள் அடங்கி இருக்கக்கூடிய முளைப்பு திறன் சரியான நேரத்திலும், காலத்திலும், சூழ்நிலையிலும் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. மண்ணுக்குள் அந்த விதை விதைக்கப் படும்போது சரியான சூழ்நிலையும் நீரும் அதற்கு கிடைக்கப் பெறும்போது. அதில் அடங்கியிருந்த திறமை முளைத்து தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. இதுபோல மனிதனுக்குள் இருக்கும் திறமைகளை சமய சந்தர்ப்ப சூழ்நிலைகளை அறிந்து எப்போதும் வெளிப்படுத்திக்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.


🔰 இன்றைய தற்சோதனன


🔰 அறிவும், திறமையும் பொதுவானது வாய்ப்பு கொடுத்தால் நிச்சயமாக வளரும். வாய்ப்பை நாடியே இது ஒவ்வொருவருக்குள்ளும் திறமைகள் அடங்கியிருக்கிறது. இவைகளை வெளிப்படுத்த  ஒவ்வொரு மனிதனும் தானாக முயற்சி செய்து சந்தர்ப்ப சூழ்நிலைகளை உருவாக்கி கொள்ள வேண்டும். இப்படி உருவாக்கிக் கொள்வதில் நிறைய சிக்கல்களும், இடர்பாடுகளும், இன்னல்களும் வரத்தான் செய்யும். அவை அனைத்துயும் நாம்  மனப்பக்குவத்தால் வென்று விடலாம்.


🔰 இன்றைய பண்புப்பயிற்சி


🔰 காற்று வீசும் போது காற்றோடு காற்றாக கொஞ்சம் நகர்ந்து கொள்ள வேண்டும். வெயில் அடிக்கும்போது கொஞ்சம் நிழலிலும், வெப்பத்திலும் இளைப்பாறிக் கொள்ள வேண்டும். மழை பெய்யும் போது மழையில் கொஞ்சம் நனைந்து கொள்ள வேண்டும். சந்தர்ப்ப சூழ்நிலைகளை சரியாக புரிந்து கொண்டு வாழும் பக்குவத்தை பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். நாணல் போல வளைந்து கொடுத்தால் தான் வாழ்க்கை நம்முடைய தாகும். வாழ்க வளமுடன்...        


🔰 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🔰 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 


      🌸வாழ்க வையகம்🌸

   🍁வளர்க வேதாத்திரியம்🍁

      🌸வாழ்க வளமுடன்🌸

Comments