நித்தியக்கடன் ஏப்ரல் 18 2025

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

ஏப்ரல் 18


💢💠💢💠💢💠💢💠💢💠💢


🔰 இன்றைய நித்தியக்கடன்


🔰 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக. 


🔰 இன்றைய சாதகம் 


🔰 சனிக்கிழமை காலை:- சாந்தி தவம் மாலை:- நித்தியானந்த தவம்.


🔰 இன்றைய நற்சிந்தனை 


🔰 புலன் இயக்கத்தையும் அறிவு இயக்கத்தையும் சமநிலையில் வைத்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும். இந்த முயற்சியை படிப்படியாக காலத்தால் நீட்டித்துக் கொள்ள வேண்டும். எந்த ஒன்றும் ஒரு காலத்தில் இருப்பதுபோல மற்றொரு காலத்தில் இருக்காது. இயற்கையினுடைய நீதியின் அடிப்படையில் காரணங்கள் இருக்கின்றன. அயரா விழிப்பு நிலையோடு இருந்து அனுதினமும் நம் மனதை சமநிலையில் வைத்துக்கொண்டு பழகவேண்டும்.


🔰 இன்றைய தற்சோதனன


🔰 புலன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள உருவானவைகளே ஐந்தறிவு ஜீவன்களாகும். புலன்கள் முழுமையாக அமைந்து விட்டன, அடுத்து புலன்களுக்கெல்லாம் மூலமான உயிரையும் அறிவையும் உணரவேண்டும், என்ற தன்னார்வத்தோடு உருவானதே இந்த மனித பிறவியாகும். நாம் வித்து தொடர் வழியாகவும் புலன்கள் வழியாகவும் தான் இந்த மனிதனாக வந்திருக்கிறோம், ஆகையால் புலன்கள் நம்மை மயக்குகிறது. நாம் இந்த புலன்கள் கிடையாது, புலன்களை தாண்டிய நிலையான அறிவே நாமாவோம்...


🔰 இன்றைய பண்புப்பயிற்சி


🔰 புலன்களுடைய அமைப்பையும் இயக்கத்தையும் சரியாக புரிந்து கொண்டால் தான், அவைகள் நம்முடைய கட்டுப்பாட்டிற்கு வரும். அதுபோன்றே அறிவினுடைய இயக்கத்தையும் சிறப்புகளையும் சரியாக புரிந்துகொண்டால் தான், புலன்களையும் அறிவையும் சமநிலையில் நிலைநிறுத்தி நம்முடைய வாழ்க்கையை, மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் வாழ முடியும். புலன்களை அறிவின் கீழ் நிலைநிறுத்தி இயக்கும் முறைக்கு பெயர்தான் ஞானயோகம். வாழ்க வளமுடன்...        


🔰 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🔰 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 


      🌸வாழ்க வையகம்🌸

   🍁வளர்க வேதாத்திரியம்🍁

      🌸வாழ்க வளமுடன்🌸


Comments