நித்தியக்கடன் மே 12 2025

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

மே 12


🔰🟣🔰🟣🔰🟣🔰🟣🔰🟣🔰


💐 இன்றைய நித்தியக்கடன்


💐 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக. 


💐 இன்றைய சாதகம் 


💐 திங்கட்கிழமை இன்று பௌர்ணமி காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம்.


💐 இன்றைய நற்சிந்தனை 


💐 இரத்த மாதிரிகள், சளி மாதிரிகள் இவைகளை எல்லாம் ஆய்வு செய்யும்போது இதனுடைய உண்மைத்தன்மை என்ன என்று நமக்கு தெளிவாக புரிய வரும். இதில் எந்த வகையான கிருமி, எந்த அளவு இருக்கிறது? இந்த கிருமிகளுடைய உளவியல் தன்மை என்ன? எந்த உறுப்பை எந்த அளவு தாக்க கூடியது? இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் என்னென்ன? என்றெல்லாம் நாம் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும். இது போன்றே.


💐 இன்றைய தற்சோதனன


💐 நம்முடைய காந்த மாதிரிகள், எண்ண மாதிரிகள், உயிர் மாதிரிகள், மன மாதிரிகள் இவைகளை ஆய்வு செய்து அதனுடைய உளவியல் தன்மைகள் இதற்கும் நமக்கும் இடையே இருக்கும் நட்பு, பகை என இவையனைத்தையும், நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இவைகளை எல்லாம் ஆய்வு செய்து தெரிந்துகொள்ள விஞ்ஞானத்தில் இன்னும் எந்த கருவிகளையும் கண்டு பிடிக்கவில்லை. ஆனால் தியானப் பயிற்சியின் மூலம் இவைகளின் பல்வேறு நிலைப் பாடுகளையும், மேலும் இவற்றின் உள், வெளி இயக்கங்களையும் முழுமையாக நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.


💐 இன்றைய பண்புப்பயிற்சி


💐 உடற்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனை இவைகளையெல்லாம் பயன்படுத்தி நம்முடைய மனதின், உயிரின் பல்வேறு உண்மைகளை உணர்ந்து கொள்ள முடியும். மேலும் காந்தத்தில் உள்ள தன்மைகளை சிறுகச்சிறுக சீரமைத்து, ஜீவாத்மாவை பரமாத்மாவோடு ஒன்றிணைக்க நமக்கு கிடைத்த முழுமையான வாய்ப்பே, மனவளக்கலை பயிற்சி முறையாகும். நாள் தவறாமல் இப்பயிற்சியை செய்து பழகி வாழ்க்கையில் எல்லா வெற்றியும், மகிழ்ச்சியும், மனநிறைவும் பெறுவோமாக. வாழ்க வளமுடன்...            


💐 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


💐 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 


      🌸வாழ்க வையகம்🌸

   🍁வளர்க வேதாத்திரியம்🍁

      🌸வாழ்க வளமுடன்🌸

Comments