நித்தியக்கடன் மே 10 2025

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

மே 10


💢🧊💢🧊💢🧊💢🧊💢🧊💢


🍁 இன்றைய நித்தியக்கடன்


🍁 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக. 


🍁 இன்றைய சாதகம் 


🍁 சனிக்கிழமை காலை:- சாந்தி தவம் மாலை:- நித்தியானந்த தவம்.


🍁 இன்றைய நற்சிந்தனை 


🍁 உணர்ச்சிவயப்படுதல், சினம், கவலை இதுபோன்ற நிலைகளில் மனம் சிக்கிக்கொண்டு இயங்கும் போது மனம் பிளவுபடுகிறது, சிதைவடைகிறது. இந்த மனச் சிதைவுகளை ஏற்படுத்திக் கொள்ளாமல் வாழ்வதே வாழ்வாகும். ஆரோக்கியம் என்பது மனச்சிதைவு இல்லாமல் வாழ்வது. எல்லா வகையான வாழ்க்கை சூழ்நிலைகளையும் சரிவர புரிந்து கொண்டு அவைகளை நிதானமாக கையாளக்கூடிய அறிவையும், திறமையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். சிந்தனைத் திறனை எந்த அளவுக்கு நாம் ஊக்குவித்துக் கொண்டு எல்லையற்ற இறைநிலையின் தன்மாற்றத்தோடு நின்று நம்முடைய தேவைகளை ஒழுங்குபடுத்திக் கொண்டு ஒவ்வொரு இறைத் தன்மையையும், நமக்குள் உணர்கிறோமோ அதுவே நம் வாழ்க்கையாக மலர்கிறது. எண்ணமாகவும், செயலாகவும் விரிவடைகிறது.


🍁 இன்றைய தற்சோதனன


🍁 ஒரு செயலை செய்வதற்கு முன் நான்கு விஷயங்களை சிந்திக்க வேண்டும். அவை தேவை, அதன் அவசியம், கையிருப்பு, விளைவு இதன் அடிப்படையில் சிந்தித்து முடிவெடுங்கள். காலதாமதமாகலாம் தவறே கிடையாது. உணர்ச்சிவயப்பட்டு அவசரத்தில் செயலை செய்து பின்பு வருத்தப்படாதீர்கள். நிதானமாக தற்சோதனை செய்து உங்களை நீங்கள் உங்களுக்குள் தகவமைத்துக் கொள்ளுங்கள்.


🍁 இன்றைய பண்புப்பயிற்சி


🍁 எல்லா இயக்கத்திலும் இருக்கக்கூடிய இறைநிலையை உணர்ந்து கொள்ளும் பண்பில் அனைவரும் உயர்வோம். இந்த இறை நீதிக்கு முரண்பாடாக இங்கு எதுவுமே நடக்க இயலாது என்ற உண்மையை உணர்வோம். இந்தப் பண்பில் நாம் நம்மை அடையாளம் கண்டு கொண்டு நமக்கு அடுத்ததாக உள்ள குடும்பம், சமுதாயம், ஊர், உலகு இவைகளுக்கு செய்ய வேண்டிய கடமையையும் செய்வோம். இவை அனைத்தையும் உணர்ந்து சிறப்பாக வாழ்வோம் வாழ்க வளமுடன்...           


🍁 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🍁 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 


      🌸வாழ்க வையகம்🌸

   🍁வளர்க வேதாத்திரியம்🍁

      🌸வாழ்க வளமுடன்🌸

Comments