வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஏப்ரல் 10
🎱💐🎱💐🎱💐🎱💐🎱💐🎱
💠 இன்றைய நித்தியக்கடன்
💠 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
💠 இன்றைய சாதகம்
💠 வியாழக்கிழமை
காலை:- தீபப்பயிற்சி, துரியதவம்,
மாலை:- இறைநிலைதவம்.
💠 இன்றைய நற்சிந்தனை
💠 உடலின் எல்லாப் பாகங்களையும் நன்கு அசைத்து இயக்கி பழக்குங்கள். ஒவ்வொரு உள்ளுறுப்பின் மீதும் கவனம் செலுத்துங்கள். மனம் எங்கே செலுத்தப் படுகிறதோ அங்கு காந்த சக்தி குவியும் என்கிற இயற்கை அமைப்போடு, இந்த முறையான பழக்கவழக்கம் உடல் ஆரோக்கியத்தை மேலும் மேலும் பெருகச் செய்யும். உடலில் உள்ள எல்லா உள்ளுறுப்புகளும் நன்றாக இயங்கும். ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம் இந்த மூன்றும் சீராக இயங்குவதற்கும். உடல் நலம், மனவளம், உயிர் வளம் இவை யாவும் சிறப்பான முறையில் அமைவதற்கும் பேருதவியாக இப்பயிற்சி அமைகிறது.
💠 இன்றைய தற்சோதனன
💠 உடல் நலத்திற்கான செயல்கள் இருந்தால் தான் உடல் நன்றாக இருக்கும். உணவு, உழைப்பு, உறக்கம், உடலுறவு, எண்ணம் இந்த ஐந்திலும் அளவு முறையை பின்பற்றும் போது தான் பருவுடலுக்கும், நுண்ணுடலுக்கும், காந்த உடலுக்கும் உண்டான கோட்பாடுகள் பாதுகாக்கப்படும். இவைகளின் நுட்பமான இயக்க அமைப்பில் தான் மெய்ஞானம் உயர்வு பெறுகிறது. இதனை தற்சோதனைக்கு எடுத்துக் கொண்டு ஐந்தில் அளவு முறை பின்பற்றும்போது மெய்ஞானம் மேலோங்குவதை உள்ளுணர்வாய் உணர்வோம்.
💠 இன்றைய பண்புப்பயிற்சி
💠 ஒரு கட்டமைப்புக்குள் நம்மை நாமே ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும். இந்த ஒழுங்கமைப்பு தான் நம்மை இறை நிலையை நோக்கி நகர்த்தக்கூடிய தன்மையாகும். இந்த தன்மையை நமக்குள் ஊக்குவித்துக்கொண்டு இதன் விஞ்ஞான உண்மைகளை எல்லாம் உள்ளுணர்வால் உணர்வோம். மனதை எப்போதும் பேரானந்த நிலையில், நிலைநிறுத்த தினந்தோறும் உடற்பயிற்சி செய்யும் பண்பை ஒழுக்கத்தை உருவாக்கிக் கொள்வோம். வாழ்க வளமுடன்...
💠 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
💠 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment