நித்தியக்கடன் ஏப்ரல் 09 2025

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

ஏப்ரல் 09


🔲💥🔲💥🔲💥🔲💥🔲💥🔲


🌿 இன்றைய நித்தியக்கடன்


🌿 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக. 


🌿 இன்றைய சாதகம் 


🌿 புதன்கிழமை 

காலை:-  ஒன்பது மையம், 

மாலை:- நித்யானந்தம்.


🌿 இன்றைய நற்சிந்தனை 


🌿 பூக்கள் தன் வாசனையால் தேனீக்களை கவர்கிறது. இந்த தேனீகள் தேனை சுவைப்பதற்காக பூக்களை நாடி வருகிறது. இதில் இருக்கும் மகரந்தம் இடம்பெயர்ந்து, விதைகளாக தங்களை உருவாக்கிக் கொள்கிறது. மகரந்த சேர்க்கை இயற்கையினுடைய நிகழ்ச்சி. இதற்கு தேனீக்கள் தேவைப்படுகிறது. தேனீக்களை கவர்வதற்கு பூக்களுக்கு வாசனை தேவைப்படுகிறது. ஒன்றினுடைய தேவையில் இன்னொன்றினுடைய வாழ்க்கை துவங்குகிறது. இந்த அழகான இயற்கை அமைப்பை உங்களுக்குள்ளும் சமுதாயத்திற்குள்ளும் ஆய்வு செய்யுங்கள்.


🌿 இன்றைய தற்சோதனன


🌿 உங்களுடைய தேவை மற்றொருவர் மூலமாக நிறைவேறும் மற்றவருடைய தேவை உங்கள் மூலமாக நிறைவேறும் இதுதான் இயற்கையின் சட்டமாகவும் நீதியாகவும் இருக்கிறது. ஒருவருக்கு ஒருவர் உதவியும் ஒத்தாசையுமாகவே வாழ்வது மனித வாழ்க்கையின் மிகச்சிறந்த தன்மையை உருவாக்கும். இதனை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையை முழுமையாக வாழ்வோம். இந்த அடிப்படை சட்டத்தை எல்லா வகையிலும் தற்சோதனை செய்து பாருங்கள் வாழ்க்கையை வாழ்வதற்கு.


🌿 இன்றைய பண்புப்பயிற்சி


🌿 ஒன்றை ஒன்று அரவணைத்தும் காத்தும் இணைத்துக்கொண்டு சிறப்பாக உருவாகியிருக்கும். இந்தப் பிரபஞ்சம், இந்த பிரபஞ்சத்தின் அத்தனை நிகழ்ச்சியையும் உணர்வதற்காகவே வந்த இனம், மனித இனம் ஆகும். தான் யார் என்று புரிந்து கொண்டு தன்னுடைய மூலத்தை உணர்ந்து கொள்வதே மனிதப் பிறப்புக்கு உண்டான சிறப்பு அமைப்பாகும். இதில் வெற்றி பெறுவதற்கான பயிற்சி முறையே மனவளக்கலை. இந்த பயிற்சியை நாள் தவறாமல் செய்யும் பண்பில் உயர்வோம். வாழ்க வளமுடன்...         


🌿 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🌿 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 


      🌸வாழ்க வையகம்🌸

   🍁வளர்க வேதாத்திரியம்🍁

      🌸வாழ்க வளமுடன்🌸


Comments