வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
மே 06
🌻🕸️🌻🕸️🌻🕸️🌻🕸️🌻🕸️🌻
💯 இன்றைய நித்தியக்கடன்
💯 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
💯 இன்றைய சாதகம்
💯 செவ்வாய்கிழமை
காலை:- துரியாதீததவம்,
மாலை:- இறைநிலை தவம்.
💯 இன்றைய நற்சிந்தனை
💯 புலன்களை கடந்து உங்களுடைய, நினைவுகளை நகர்த்தி கொள்ளும்போது, உங்களுடைய ஜீவகாந்தம் உங்களுடைய உடலினுடைய அகத்தை தாண்டி, இந்த பிரபஞ்ச நிலையோடு தொடர்பு கொள்ளும். இந்த சிறப்பு இயக்க தன்மையை நீங்கள் முறையான பயிற்சியினால் மட்டும்தான் வெற்றி கொள்ள முடியும். இந்த நிகழ்வினை ஒவ்வொரு மனிதனும் தனக்குள் உணர்ந்து அனுபவமாக்கிக் கொள்வதற்காகவே, அருள் தந்தை "வேதாத்திரி மகரிஷி" அவர்கள் அன்போடு அருளி இருப்பது "வேதாத்திரியம்" மனவளக்கலை பயிற்சி முறையாகும்.
💯 இன்றைய தற்சோதனன
💯 புலன்களை கடப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. உங்களுடைய அன்றாட செயல்களை அதன் தன்மையிலிருந்து சிறுக சிறுக குறைத்துக் கொண்டே வரும்போது தான் எல்லாவகையிலும், புலன்களை கடக்க இயலும். நீங்கள் அறுசுவையையும் எல்லாவற்றிலும் உணரமுடியும். உப்பை பயன்படுத்தாமல் உப்புச் சுவையை உணவுகளில் உணர்வதற்கு முயற்சி செய்யுங்கள். இனிப்பை பயன்படுத்தாமல் இனிப்பு சுவையை உணவுகளில் உணர்வதற்கு முயற்சி செய்யுங்கள். காரத்தை பயன்படுத்தாமல் கார சுவையை உணவுகளில் உணர்வது முயற்சி செய்யுங்கள். இப்படியாக உங்களுடைய புலன்கள் நுணுக்கமான இயக்கத்தில் பறக்கும்போது, மனம் புலன்களை கடக்கும். இந்த சாதனையை இதன் மூலம் தான் தனதாக்கிக் கொள்ள முடியும். இதனை தற்சோதனை செய்து வெற்றி காண்பீர்கள்.
💯 இன்றைய பண்புப்பயிற்சி
💯 மனதை பண்படுத்தினால் மட்டுமே உங்களுடைய செயல்களை ஒழுங்கு படுத்த முடியும். மனதினுடைய இயக்க வேகத்தை குறைத்துக்கொண்டு அதனுடைய அன்றாட பழக்கத்தில் இருந்து மனதை ஒழுங்குபடுத்துங்கள். அப்போது தான் உங்களுடைய செயல்களை வடிகட்ட முடியும். இந்த சிறப்பான பண்பு உங்களை உங்களுக்குள் இருக்கக்கூடிய தெய்வ நிலையை உணரச் செய்யும். உணர்வதற்கான முயற்சியை விருப்பத்தோடும் ஆர்வத்தோடும் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள. வாழ்க வளமுடன்...
💯 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
💯 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment