வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
மார்ச் 30
⚡🕸️⚡🕸️⚡🕸️⚡🕸️⚡🕸️⚡
🎲 இன்றைய நித்தியக்கடன்
🎲 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🎲 இன்றைய சாதகம்
🎲 ஞாயிற்றுகிழமை
காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம்
மாலை:- இறைநிலை தவம்.
🎲 இன்றைய நற்சிந்தனை
🎲 மனதை விருப்பு வெறுப்பு இல்லாமல் எப்போதும் சமநிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். ஒருவருக்கு விருப்பு-வெறுப்பு இருக்குமேயானால் அவருடைய வாழ்க்கைச் சூழ்நிலைகளில் உணர்ச்சிவயப்பட்ட செயல்பாடுகள் அதிகமாக காணப்படும் இந்த உலகில் ஒருவரை உங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்றால் அதற்கு நேர் எதிர்முனையில் இன்னொருவரை உங்களுக்கு மிகவும் பிடிக்காமல் போகும். இந்த கோட்பாடு உணவு இடம் பொருள் நபர் வளர்ப்பு பிராணிகள் என்று எல்லாவற்றிலும் நம்மால் தெளிவாக நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.
🎲 இன்றைய தற்சோதனன
🎲 உயிர் உணர்வு பெற வேண்டும் உண்மையான ஆன்மீக வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கம் கொண்ட எவரும் இந்த விருப்பு வெறுப்பற்ற தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். உயர் துகள்களில் பிணைப்புத் தன்மை சிறந்த முறையில் அமைத்துக் கொண்டால் தான் ஆன்மீக வாழ்விலும் இறை உணர்விலும் நம்மால் முழுமையான வெற்றியை உணரமுடியும்.
🎲 இன்றைய பண்புப்பயிற்சி
🎲 ஏதோ ஒன்றின் மீது விருப்பத்தோடு ஏதோ ஒன்றின் மீது வெறுப்போடும் உள்ள மனதை கொண்டு நாம் இறை உணர்வில் அடுத்தடுத்த தளத்திற்கு செல்ல முடியாது. விருப்பு வெறுப்பு என்பது நம் ஜீவகாந்த இயக்கத்தை சிதைத்துவிடும் எதனோடும் ஒன்றி கலந்து அதனைப் பற்றிய உண்மைகளை உணரமுடியாது செய்துவிடும். ஆக விருப்பு வெறுப்பு இல்லாத சமநிலை மனதை உள் ஆழத்திலிருந்து வளர்த்துக் கொள்வோம் உண்மையை உண்மையாய் உணர்ந்து வாழ்வோம். வாழ்க வளமுடன்...
🎲 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🎲 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment