வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
பிப்ரவரி 27
♻️🪻♻️🪻♻️🪻♻️🪻♻️🪻♻️
🎱 இன்றைய நித்தியக்கடன்
🎱 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🎱 இன்றைய சாதகம்
🎱 வியாழக்கிழமை
காலை:- தீபப்பயிற்சி, துரியதவம்,
மாலை:- இறைநிலைதவம்.
🎱 இன்றைய நற்சிந்தனை
🎱 உலோகங்களை திட நிலையில் இருந்து திரவ நிலைக்கு மாற்றுவதற்கு, அதாவது தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, இயம், இரும்பு என்று ஒவ்வொரு உலோகத்திற்கும் ஒவ்வொருவிதமான வெப்பநிலை தேவை. ஒரே மாதிரியான வெப்பநிலை அவைகளை திட நிலையில் இருந்து திரவ நிலைக்கு, மாற்றும் என்றால் அது அவ்வாறு இல்லை. உலோகத்தில் உள்ள அணுக்களின் எண்ணிக்கைக்கும் பிணைப்புக்கும் ஏற்றார்போல வெப்பநிலை அளவும் மாறுபடும், வேறுபடும். இதுபோல உயிர் மீது படிந்திருக்கும் வினை பதிவுகளை போக்கிக் கொள்வதற்கு ஒவ்வொரு விதமான வெப்பம் தேவை...
🎱 இன்றைய தற்சோதனன
🎱 உயிரை வெப்பப்படுத்தி தான் அதன் மீது படிந்திருக்கும், விலங்கின படிமங்களை கருமையத்தில் இருந்து போக்க முடியும். உடல்பயிற்சி, காயகல்பம், தவம், மௌனம், தற்சோதனை அனைத்துமே ஒவ்வொரு விதமான வெப்பநிலையை உருவாக்கக் கூடியவையாகும். சிறுகச்சிறுக இந்த ஞானச் சூட்டினை அதிகரித்துக் கொண்டு, விளங்கின பதிவுகளை போக்கிக் கொள்வதற்காக நமக்கெல்லாம், அன்பும் கருணையுமாக "வேதாத்திரி மகரிஷி"யால் மனவளக்கலை உருவகப்படுத்தி வழங்கப்பட்டிருக்கிறது.
🎱 இன்றைய பண்புப்பயிற்சி
🎱 அபரிமிதமான ஆர்வத்தின் பிழையால் அவசரப்பட்டு முடிவெடுத்து, விலங்கின படிமங்களை உடனடியாக உயிர் மீதிருந்து கருமையத்திலிருந்து போக்க வேண்டும், என யாரும் முடிவு எடுக்க வேண்டாம். அதனை படிப்படியாகத்தான் போக்கிக் கொள்ள வேண்டும். ஒரு வாரம், ஒரு மாதம், ஒரு வருடம், பத்து வருடம், அடுத்த பிறவி என்று கருமையத்தின் தன்மைக்குத் தக்கவாறு அது சிறுக சிறுக களைவதும் களையப்படுவதும் தான் இறைநீதி. இந்நீதியை ஆராய்ச்சியோடு ஏற்றுக்கொண்டு, புரிந்துகொண்டு கடமை தவறாமல் தினம்தோறும் பயிற்சி செய்வோம். வாழ்க வளமுடன்...
🎱 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🎱 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment