நித்தியக்கடன் மார்ச் 27 2025

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

மார்ச் 27


🌀🎱🌀🎱🌀🎱🌀🎱🌀🎱🌀


🔅 இன்றைய நித்தியக்கடன்


🔅 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக. 


🔅 இன்றைய சாதகம் 


🔅 வியாழக்கிழமை 

காலை:- தீபப்பயிற்சி, துரியதவம், 

மாலை:- இறைநிலைதவம்.


🔅 இன்றைய நற்சிந்தனை 


🔅 கருமையம் ஒரு காந்தக் களம் எல்லாவிதமான ரகசியங்களும், அனுபவங்களும் இங்கேதான் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மனிதர்களுடைய கருமையம் இந்த பூமியினுடைய கருமையத்தோடும், இந்த பூமியினுடைய கருமையம் சூரியனோடும், இந்த சூரியகுடும்பத்தினுடைய கருமையம் இந்த பிரபஞ்சத்தினுடைய கருமையத்தோடும் என அனைத்து கருமையங்களுக்குள்ளும் ஒன்றோடு ஒன்று இணைந்தே இயங்குகிறது. அதன் அனைத்து ரகசியங்களும் அனுபவங்களும் இருப்பாக அனைத்துக் கருமையங்களுக்குள்ளும் இருக்கிறது. அவைகளை முறையாக திறந்து உணர்ந்து கொள்ளும் பக்குவமான பயிற்சி மட்டுமே தேவை.


🔅 இன்றைய தற்சோதனன


🔅 உயிர்காந்தம், வான்காந்தம் கோள்களில் இருந்து வரும் காந்தம்,பஞ்சபூதங்களில் இருந்து எழும் காந்தம் என காந்தம் பல்வேறு வகைப்படும். எல்லா காந்தமும் ஒரே காந்தம் கிடையாது. பல்வேறுபட்ட தன்மைகளை உடையது. இந்த அனைத்து வகையான காந்தத்திற்குள்ளும் ஊடுருவி நின்று ஆராயத்தக்க சிறப்பு மனிதர்களுக்குள் நிறைவாகவே அமைந்துள்ளது. ஜீவகாந்தத்தை அனைத்து வகையான காந்தத்தோடும் இணைத்து இயக்கி பழகி தற்சோதனை செய்து விளக்கம் பெறுவோம், நம் சிறப்பை உணர்வோம்.


🔅 இன்றைய பண்புப்பயிற்சி


🔅 ஒரு நாள் இரு நாளில் இது சாத்தியம் கிடையாது. பலநாள்  பலமான வைரக்கியத்தோடு முயற்சி செய்தால்தான் இது சாத்தியமாகும். தனிமனித ஒழுக்கமும் ஐவகையான கடமைகளையும் சரியாக செய்துவரும் கருமையமே இதற்கு தகுதியான கருமையமாகும். தகுதியை மட்டும் வளர்த்துக் கொள்ளுங்கள் உங்களுக்கு தேவையான அனைத்தும் உங்களுக்குள்ளேயே இருப்பாக இருக்கிறது. ஒழுக்கத்தால் இந்த பிரபஞ்சத்தையே கட்டி ஆள முடியும். வெற்றி வாய்ப்பாக வேதாத்திரியம் இருக்கிறது வாழ்க வளமுடன்...      


🔅 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🔅 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 


      🌸வாழ்க வையகம்🌸

   🍁வளர்க வேதாத்திரியம்🍁

      🌸வாழ்க வளமுடன்🌸


Comments