நித்தியக்கடன் பிப்ரவரி 26 2025

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

பிப்ரவரி 26


💢🌻💢🌻💢🌻💢🌻💢🌻💢


⛳ இன்றைய நித்தியக்கடன்


⛳ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக. 


⛳ இன்றைய சாதகம் 


⛳ புதன்கிழமை 

காலை:-  ஒன்பது மையம், 

மாலை:- நித்யானந்தம்.


⛳ இன்றைய நற்சிந்தனை 


⛳ உடலின் எல்லாப் பகுதிகளையும் நன்கு அசைத்து இயக்கி பழக்குங்கள். இந்த முறையில் இயங்கும்போது உடலில் ஆரோக்கியம் பெருகும். உடலில் உள்ள எல்லா உறுப்புகளும் நன்றாக இயங்க வேண்டும். ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம் இந்த மூன்றும் சீராக இயங்க வேண்டும். உடல் நலமும் மனவளமும் அப்போதுதான் நல்ல முறையில் அமையும்.


⛳ இன்றைய தற்சோதனன


⛳ உடல் நலத்திற்கான செயல்கள் இருந்தால் தான் உடல் நன்றாக இருக்கும். உணவு, உழைப்பு, உறக்கம், உடலுறவு, எண்ணம் இந்த ஐந்திலும் அளவுமுறை காத்தல் வேண்டும். இதில் அளவு முறையை பின்பற்றும் போது தான் பருவுடலும், அதனை தாண்டி நுண்ணுடலும், காந்த உடலும் வலுவாக இருக்கும். தற்சோதனை செய்து இந்த ஐந்திலும் அளவு முறை காப்பீர்களாக.


⛳ இன்றைய பண்புப்பயிற்சி


⛳ ஒரு கட்டமைப்புக்குள் நம்மை நாமே ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும். இந்த ஒழுங்கமைப்பு தான் நம்மை இறை நிலையை நோக்கி நகர்த்தக்கூடிய தன்மையாகும். இந்த தன்மையை நமக்குள் ஊக்குவித்துக்கொண்டு உயர்வோம் தினந்தோறும். உடற்பயிற்சி செய்யும் பண்பை ஏற்றுக்கொண்டு ஒழுங்கமைப்போடு வாழ்வோம்.  


⛳ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


⛳ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 


      🌸வாழ்க வையகம்🌸

   🍁வளர்க வேதாத்திரியம்🍁

      🌸வாழ்க வளமுடன்🌸


Comments