நித்தியக்கடன் மார்ச் 26 2025

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

மார்ச் 26


🔲🌻🔲🌻🔲🌻🔲🌻🔲🌻🔲


⛳ இன்றைய நித்தியக்கடன்


⛳ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக. 


⛳ இன்றைய சாதகம் 


⛳ புதன்கிழமை 

காலை:-  ஒன்பது மையம், 

மாலை:- நித்யானந்தம்.


⛳ இன்றைய நற்சிந்தனை 


⛳ நெல்லுக்கு பாயும் நீர் சிறிது புல்லுக்கும் பாய்கிறது. சமுதாயத்தில் நல்ல விஷயங்கள் வளர்ச்சி அடையும்போது அதனோடு சேர்ந்து கொண்டு சில தேவையில்லாத தீய விஷயங்களும் வளர்ச்சி பெறுகிறது. இதில் இருக்கும் இறைநீதி ஒன்றே ஒன்றுதான் பொதுவாக இருக்கும் இயற்கை எனும் பேராற்றல். இந்த காலகட்டத்தில் வளர்ச்சிக்கு உரியது என்ற ஒரே ஒரு அடிப்படையை வைத்து கொண்டு இயங்குகிறது நல்லது வரும்போது சில தீயதும் அதனோடு சேர்ந்து வளர்ச்சி பெறுகிறது. இந்த உண்மையை தெளிவாக உணர்ந்து கொண்டு நமக்கு வெளியே வளரக்கூடிய விஷயங்களில் பெரிதாக எந்த ஒரு மாற்றத்தையும் உடனடியாக  ஏற்படுத்திவிட முடியாது. இதை கொஞ்சம் அகம்நோக்கி நமக்குள்ளாக திருப்பி பார்க்கலாம்.


⛳ இன்றைய தற்சோதனன


⛳ நமக்குள்ளும் இந்த காலகட்டத்தில் வளர்ச்சி என்ற ஒரே நீதி செயல்படும் போது நமக்குள் இருக்கும் அறிவுத்திறமையை கொண்டு பகுத்துப் பார்த்து. நல்லதை மட்டும் வளர்த்துக்கொள்ள வேண்டும். அல்லதையும் தீயவற்றையும் முளைத்த இடம் இல்லாமல் இருக்க பயிற்சி முறையை மேற்கொள்ள வேண்டும். அல்லதை வளரவிடாமல் தடுத்து நிறுத்தக் கூடிய வலிமை வாய்ந்த செயல் தற்சோதனை மட்டுமே. தற்சோதனையை ஒவ்வொரு கணமும் மேற்கொள்வோம்.


⛳ இன்றைய பண்புப்பயிற்சி


⛳ உள்ளதை உள்ளவாறு உணர்ந்து கொள்ளும் பண்பில் உயர்வு காண்போம் இருக்கின்ற நிலையில் அப்படியே அதை ஏற்றுக்கொள்வது. ஒவ்வொன்றும் அதனுடைய கருமைய தன்மைக்குத் தக்கவாறு சிறப்பாகவே இயங்குகிறது. இது வானுலவும் கோள்களுக்கும்  பொருந்தும். இந்த நில உலகில் வாழ்கின்ற ஒவ்வொரு ஜீவராசிக்கும் பொருந்தும். அவரவர் தன்மைக்கு ஏற்ப கருமைய தூய்மைக்கு ஏற்பவே அவர்கள் தங்களை தங்களின் எண்ணம் சொல் செயல் மூலமாக வெளிப்படுத்திக் கொள்கிறார்கள் என்ற உண்மையை, உள்ளதை உணர்ந்து அப்படியே அதை ஏற்றுக்கொள்ளும் பண்பே மனிதப்பண்பு இதில் நாளுக்கு நாள் உயர்வு பெறுவோம். வாழ்க வளமுடன்...     


⛳ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


⛳ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 


      🌸வாழ்க வையகம்🌸

   🍁வளர்க வேதாத்திரியம்🍁

      🌸வாழ்க வளமுடன்🌸


Comments