வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
மார்ச் 25
🍁🪻🍁🪻🍁🪻🍁🪻🍁🪻🍁
🔰 இன்றைய நித்தியக்கடன்
🔰 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🔰 இன்றைய சாதகம்
🔰 செவ்வாய்கிழமை
காலை:- துரியாதீததவம்,
மாலை:- இறைநிலை தவம்.
🔰 இன்றைய நற்சிந்தனை
🔰 சர்க்கரையை ஒரு பிளாஸ்டிக் பையில் கட்டி தண்ணீருக்குள் போட்டால் சர்க்கரை எவ்வளவு நேரம் ஆனாலும் ஒருபோதும் அது கரைய போவது கிடையாது. இது போலத்தான் நம் உயிர் மீது படிமங்கள் இருக்கிறது (விலங்கினப் பதிவு) இந்த படிமங்கள் இருக்கும் வரை இறைநிலையோடு உயிர் ஒன்றி கலப்பதற்கு வாய்ப்பே இல்லை இந்த விலங்கினப் பதிவாகிய தீவினைப் பதிவையும், நல்வினை பதிவையும் நன்றாக தற்சோதனை செய்து தன்நிறைவு காணவேண்டும்.
🔰 இன்றைய தற்சோதனன
🔰 உயிர் மீது இருக்கும் இந்த படிமத்தை எப்படித்தான் போக்கிக் கொள்வது என்றால் வேறு ஒன்றுமல்ல நீங்கள் எந்த அளவிற்கு தற்சோதனை செய்து உங்களை பண்பாளராக மாற்றி கொள்கிறீர்களோ அந்த அளவு உயிரின் மீது இருக்கக்கூடிய இந்த படிமங்களை கரைந்து கொண்டே வரும் மேலும் உடற்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனை இவைகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள் முயற்சிக்குதக்க வெற்றி நிச்சயம் உண்டு.
🔰 இன்றைய பண்புப்பயிற்சி
🔰 நாம் நம்மை மதிக்கும் பண்பில் உயரவேண்டும் மனிதனாக நாம் இருக்கிறோம் என்பதற்கான அடையாளம் நம்முடைய மனசாட்சியை மதித்து வாழ்வதே ஆகும். நம்மை ஒரு நாளும் தவறான மனிதனாக அடையாளப்படுத்தி விடக்கூடாது. நம் மனசாட்சியே நமக்குள்ளாக இருக்கும் தெய்வநிலையாகும் இந்த உண்மையை உணர்ந்து மனசாட்சியோடு நிறைவாக வாழ்வோம். எப்போதும், எங்கேயும், எல்லா வகையிலும் மனசாட்சியை கொன்றுவிடாமல் உயிரோடு வாழ்வோம். வாழ்க வளமுடன்...
🔰 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🔰 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment