வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
பிப்ரவரி 24
💥🌿💥🌿💥🌿💥🌿💥🌿💥
🍥 இன்றைய நித்தியக்கடன்
🍥 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🍥 இன்றைய சாதகம்
🍥 திங்கட்கிழமை
காலை:- கண்ணாடிப் பயிற்சி,
பஞ்சேந்திரிய தவம்,
மாலை:- நித்யானந்த தவம்.
🍥 இன்றைய நற்சிந்தனை
🍥 சிந்தனை, சிக்கனம், சீர்திருத்தம் இது நம் வாழ்வின் எல்லாவற்றிலும் தேவை. காலத்துக்கு ஏற்ற மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு நம்முடைய தேவைகளையும், பழக்கவழக்கங்களையும் சீரமைத்துக் கொள்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆன்மீக சிந்தனையோடு நம் வாழ்வை சிறப்பாக வாழ்வதற்கு சிந்தனை, சிக்கனம், சீர்திருத்தம் மிகவும் முக்கியமானது.
🍥 இன்றைய தற்சோதனன
🍥 எண்ணம், சொல், செயல் மூன்றையும் ஒழுங்கு செய்து கொள்வது மிகவும் அவசியமாகும். எண்ணம், சொல், செயல் மூன்றிலும் சிந்தனை, சிக்கனம், சீர்திருத்தம் இதனை கடைபிடித்தால்தான் நமக்கான வாழ்வை நாம் வாழ்வதற்கு தயாராவோம்.
🍥 இன்றைய பண்புப்பயிற்சி
🍥 நம்முடைய கருமையத்திற்கு பொருத்தமில்லாமல் எந்த ஒரு வாழ்க்கை சூழ்நிலையும் நமக்கு அமைவதும் கிடையாது, அமையப் போவதும் கிடையாது. இதனை நன்றாக சிந்தித்து உணர்ந்து கொண்டு, எப்போதும் அயறாவிழிப்பு நிலையில் இருக்கும் பண்பில் உயர்வோம். வாழ்க வளமுடன்...
🍥 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🍥 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment