வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
மார்ச் 24
🔥❄️🔥❄️🔥❄️🔥❄️🔥❄️🔥
🍥 இன்றைய நித்தியக்கடன்
🍥 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🍥 இன்றைய சாதகம்
🍥 திங்கட்கிழமை
காலை:- கண்ணாடிப் பயிற்சி,
பஞ்சேந்திரிய தவம்,
மாலை:- நித்யானந்த தவம்.
🍥 இன்றைய நற்சிந்தனை
🍥 புலன்களை கடந்து நாம் சிந்திக்க துவங்கி விட்டோமேயானால், புலன்களை கடந்து நாம் நின்று பழகிவிட்டோமேயானால், புலன்களுக்கு அப்பால் ஒரு வாழ்க்கை இருக்கிறது. அந்த வாழ்க்கையின் உண்மை தன்மையை அங்கே சென்று வாழ்ந்தால் மட்டும் தான் அனுபவமாக பெறமுடியும். அதுவரையில் அது வரையில் அதற்கான ஆர்வத்தையும், தூண்டுதலையும் நமக்குள் இருந்து நம்மை தூண்டிக் கொண்டே தான் இருக்கப் போகிறது இறைநிலை. புலன்களை கடப்பதற்கான உடலமைப்பையும், மூளை செல்களையும் பெற்றிருக்கும் ஞானமான பிறவி இந்த மனிதப் பிறவி...
🍥 இன்றைய தற்சோதனன
🍥 புலன்களை கடப்பதற்கு முறையான பயிற்சி தேவை. இந்த பயிற்சி மட்டும் போதுமா? என்றால்... அதனோடு சேர்த்து அதனையும் தாண்டி, நமக்குள் இருக்கக்கூடிய தேவையற்ற பதிவுகளை விளங்கின தன்மைகளை உடல் செல்களில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும். இந்த சரீரத்தை தூய்மை செய்ய வேண்டும். ஒவ்வொரு செல்லும் தூய்மை பெற வேண்டும். அப்போதுதான் மனம் முழுமை பெறும். "உடலிலே நோய் உள்ளத்திலே களங்கம் இதுவே விலங்கின பதிவுகளின் அடையாளம்" என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் தெளிவாக விளக்கியிருக்கிறார்கள்.
🍥 இன்றைய பண்புப்பயிற்சி
🍥 இதனுடைய இன்னொரு பரிமாணமாக கற்பனைகள் எவ்வளவுக்கு எவ்வளவு, நம்மை ஆக்கிரமித்து இருக்கிறதோ அதுவும் விலங்கின பதிவுகள்தான். தேவையற்ற எதிர்பார்ப்புகள், எதிர்மறையான சிந்தனைகள், ஞாயம் இல்லாத செயலியக்க முறைகள் இவை அனைத்தும் விளங்கினுடைய அழுக்கும் கசடுமாகும். இந்த கசடுகளை தான் வள்ளுவரும் போக்கிக்கொள்ள வேண்டும் என்று அடிக்கோடிட்டு கூறியிருக்கிறார் "கற்க கசடற கற்றவை கற்றபின் நிற்க அதற்குத் தக" கற்போம், கசடறுப்போம், கற்பிப்போம். மெய்ஞான வாழ்வை வாழ்வோம் வாழ்க வளமுடன்...
🍥 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🍥 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment