நித்தியக்கடன் மார்ச் 22 2025

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

மார்ச் 22


💐🟣💐🟣💐🟣💐🟣💐🟣💐


💥 இன்றைய நித்தியக்கடன்


💥 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக. 


💥 இன்றைய சாதகம் 


💥 சனிக்கிழமை காலை:- சாந்தி தவம் மாலை:- நித்தியானந்த தவம்.


💥 இன்றைய நற்சிந்தனை 


💥 தமிழகத்தில் இருந்து வேறு மாநிலத்திற்கோ, அல்லது வேறு நாட்டிற்கோ செல்ல வேண்டுமானால் தரை வழியாக, ஆகாயம் வழியாக, கப்பலை பயன்படுத்தி தண்ணீர் வழியாகவும் செல்லலாம். இந்த பூமி 25,000 மைல் சுற்றளவு உடையது அதைவிட பல கோடி மயில் பயணப்பட வேண்டும் உயிருக்குள் இறைவனை நேக்கி. அப்போதுதான் இறையுணர்வும் அனுபவமும் கிட்டும்.


💥 இன்றைய தற்சோதனன


💥 இந்த பூமியில் ஒரு இடம் விட்டு மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு பல்வேறு வழிமுறைகளை பின்பற்ற முடியும். அதுபோல உயிருக்குள் பயணிப்பதற்கும் பல்வேறு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். நாள் தவறாமல் காயகல்பம், தவம், தற்சோதனை பயிற்சி செய்து உங்களை நாளுக்கு நாள் உயர்த்திக் கொள்ளுங்கள். எப்படியெல்லாம் பயணிக்க வேண்டும் என்று உங்களுக்கே உங்களுடைய அனுபவமாகவே இறைவன் உணர்த்துவான்.


💥 இன்றைய பண்புப்பயிற்சி


💥 பலவகையான கற்பனைகள் நமக்குள் இருக்கிறது இந்த கற்பனை எல்லாம் விட்டுவிட்டு எதார்த்தமாக வாழும் வாழ்க்கை முறைக்கு உங்களை உயர்த்திக் கொள்ளுங்கள் எதார்த்தமான முறையில் வாழும் பண்பில் தான் இறைநிலையோடு இணையும் தகுதி  உயர்வு பெறுகிறது. இறை உணர்வு பெறுவதற்காகவே இந்த மனிதப்பிறவி அமைந்துள்ளது. என்ற சிந்தனையில் இருந்து விலகாமல் உயர்வோம், எதார்த்தமாக வாழும் பண்பில். வாழ்க வளமுடன்...     


💥 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


💥 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 


      🌸வாழ்க வையகம்🌸

   🍁வளர்க வேதாத்திரியம்🍁

      🌸வாழ்க வளமுடன்🌸

Comments