நித்தியக்கடன் மார்ச் 21 2025

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

மார்ச் 21


🟠🕳️🟠🕳️🟠🕳️🟠🕳️🟠🕳️🟠


🌸 இன்றைய நித்தியக்கடன்


🌸 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக. 


🌸 இன்றைய சாதகம் 


🌸 வெள்ளிகிழமை காலை, மாலை இரண்டு வேளையும் சாந்தி தவம்.


🌸 இன்றைய நற்சிந்தனை 


🌸 இந்த பூமியில் அனைத்து உயிர்களும் ஒன்றை ஒன்று சார்ந்து, ஒவ்வொரு ஜீவனும் தன்னுடைய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறது. தாவரங்கள் வளர்வதற்கு தண்ணீர் தேவை. ஆடு, மாடு, மான், பறவைகளுக்கு தாவரம் தேவை. மாமிச பட்சிணிகளுக்கு மாமிசம் தேவை. மனிதர்களுக்கு காய், கனி, கீரை, தாவரம், தானியம் தேவை. இவ்வாறு ஒன்றை ஒன்று சார்ந்து தான் இந்த பூமியை சார்ந்த ஜீவன்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. மேலும் சில உதாரணங்களை காண்போம்... தேனீக்களை எடுத்துக் கொள்வோம் தேனீக்கள் அழிந்துவிட்டால், மனித சமுதாயமும் மொத்த ஜீவராசிகளும் அழிந்து விடும்...


🌸 இன்றைய தற்சோதனன


🌸 தேனீக்கள் இப்பூமியில் அழிந்து விட்டால், எந்த ஒரு மகரந்த சேர்க்கையும் நடைபெறாது. மகரந்த சேர்க்கை இல்லாமல் தாவரங்கள் இப்பூமியில் வளர முடியாது. பூ, காய், கனி, விதை என்று எதுவுமே கிடைக்காது. தாவரங்கள் இல்லாமல் எந்த ஒரு ஜீவனும் உயிர்வாழ முடியாது. இவை அனைத்திற்கும் மகரந்தச்சேர்க்கை நடந்தே ஆகவேண்டும். இயற்கையினுடைய அமைப்பை மனிதர்கள் தங்களுடைய அறியாமையாலும், சுயநலத்தாலும் காலத்திற்கு காலம் கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.


🌸 இன்றைய பண்புப்பயிற்சி


🌸 இந்த தவறுகளை எல்லாம் மனிதர்கள் திருத்திக்கொண்டு, தன்னைப் போலவே மற்ற ஜீவன்களும் வாழ்வதற்குரிய வாய்ப்புகளை, வசதிகளை, இயற்கை அமைப்பை தன்னுடைய செயற்கை முறைகளால், அழித்து விடாமல் தானும் பாதுகாப்போடு வாழ்ந்து, தன்னை சார்ந்துள்ள அனைத்து ஜீவன்களுக்கும் பாதுகாப்பாக வாழ்வதே அறிவின் முழுமை பெயராகும், இயற்கையோடு இணைந்த வாழ்வாகும். இவ்வாறு நாமும் வாழ்வோம் நம்முடைய சந்ததிகளும் வாழ வழிவகை செய்வோம். வாழ்க வளமுடன்...     


🌸 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🌸 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 


      🌸வாழ்க வையகம்🌸

   🍁வளர்க வேதாத்திரியம்🍁

      🌸வாழ்க வளமுடன்🌸

Comments