வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
மார்ச் 18
💦🔅💦🔅💦🔅💦🔅💦🔅💦
🔘 இன்றைய நித்தியக்கடன்
🔘 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🔘 இன்றைய சாதகம்
🔘 செவ்வாய்கிழமை
காலை:- துரியாதீததவம்,
மாலை:- இறைநிலை தவம்.
🔘 இன்றைய நற்சிந்தனை
🔘 நாம் இந்த மனித சரீரத்திற்கு வருவதற்கு முன்னால் ஐந்தறிவு நான்கறிவு மூன்றறிவு இரண்டறிவு ஓரறிவுள்ள ஜீவன்களாக வாழ்ந்து வித்து தொடராகவும், சஞ்ஜிதகர்மவினை பயனாகவும் நம்முடைய கருமையத்திற்குள் நிறைய பதிவுகள் இருக்கின்றன இவற்றின் விளைவாக நம்முடைய வாழ்க்கையில் சில பல நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன இந்த விளக்கத்தை எல்லாம் நமக்கு எதற்காக வேதாத்திரி மகரிஷி அவர்கள் கொடுத்தார்கள் என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். விலங்கின பதிவுகளையும் சஞ்சித கர்மங்களையும் பெரிதாக நினைத்து நாம் சோர்ந்து விடக்கூடாது நல்வினைப் பதிவுகளை அதிகரித்து கொண்டு நம்பிக்கையோடு முன்னேறி செல்ல வேண்டும் என்பதற்காகவே பல்வேறு தலைப்புகளில் நமக்கு விளக்கங்களை அருள் இருக்கிறார்கள்.
🔘 இன்றைய தற்சோதனன
🔘 இந்த விளக்கங்களை எல்லாம் கேட்டு நாம் ஒரு முடிவு எடுத்தாக வேண்டும் நாம் இந்த பூமிக்கு வந்த வரலாறு, இது நம்முடைய சரித்திரம் என்பதை ஏற்றுக்கொண்டு ஏற்றுக்கொண்ட நிலையில் நின்று நான் இனி எப்படி வாழ வேண்டும் என்பதை முடிவு செய்து என்னுடைய நிலைப்பாடு என்ன என்பதை நான் தான் எனக்கு உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். புலன் மயக்கத்தில் இருந்து என்னை விடுவித்துக் கொள்ள கூடிய பயிற்சி முறைகளில் ஆழமாக ஈடுபடுத்தி இறை ஞானத்தை உணர்வதே என் வாழ்வின் நோக்கம் ஆகும்.
🔘 இன்றைய பண்புப்பயிற்சி
🔘 இந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு எனக்கு ஒரு மனப் பக்குவம் தேவை அந்த மனப்பக்குவத்தை நான் நாள் தவறாமல் செய்து வரக்கூடிய உடற்பயிற்சி காயகல்பம் தவம் தற்சோதனை இவைகளில் வழியாகத்தான் பெற முடியும் என் கருமையத்தை மாற்றி அமைப்பதற்கு இப்பயிற்சிதான் எனக்கு பாதுகாப்பாகவும் உறுதுணையாகவும் வழி நடத்துவதாகவும் அமையும் என்பதை முழுமையாக நம்பி ஏற்றுக்கொண்டு பிறவியின் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வோமாக நம்முடைய அடுத்த தலைமுறை துன்பமற்ற வாழ்க்கையை பாதுகாப்பான இயற்கை சூழ்நிலையை பெறுவதற்கு நாம் இன்று நமக்குள் விதைக்க வேண்டிய விதை வேதாத்திரியம். வாழ்க வளமுடன்...
🔘 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🔘 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment