நித்தியக்கடன் மார்ச் 16 2025

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

மார்ச் 16


⭕🔲⭕🔲⭕🔲⭕🔲⭕🔲⭕


🌾 இன்றைய நித்தியக்கடன்


🌾 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக. 


🌾 இன்றைய சாதகம் 


🌾 ஞாயிற்றுகிழமை 

காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம் 

மாலை:- இறைநிலை தவம்.


🌾 இன்றைய நற்சிந்தனை 


🌾 உங்களுடைய மனதிற்கு முன்னும் பின்னும் நீங்களே இருங்கள். பிறருடைய எண்ணங்களை கடன் வாங்கி உங்கள் வாழ்க்கையை அழகுபடுத்த எண்ணாதீர்கள் அது பெரும்பாலும் அலங்கோலமாகவே முடியும். பிறர்மன தூண்டுதலில் இருந்து காப்பு பெறுங்கள். காப்பை பயன்படுத்தி உங்களை நீங்களே மீட்டெடுத்துக் கொள்ளுங்கள். அவர்களுடைய எண்ணம் அவர்களுக்கு மட்டுமே பொருந்தும். உங்களுக்கான வாழ்க்கை சூழ்நிலையை உங்கள் அறிவுக்குள்ளிருந்து உங்கள் மனதின் மூலமாக நீங்களே தேடிக் கண்டுபிடியுங்கள்.


🌾 இன்றைய தற்சோதனன


🌾 உங்களுடைய தேடலின் ஆழத்துக்கும், அகலத்திற்கும் ஏற்றவாறு உங்களுக்குள் இருக்கக்கூடிய இறைநிலை உங்களை நிச்சயமாக நல்வழிப்படுத்தும். உங்களுடைய தேடலும் ஆர்வமும் இறைநீதிக்கு பொருந்தும்படியாக அமைத்துக் கொள்ளுங்கள். தற்சோதனை செய்து உங்களுக்குள் இருக்கக்கூடிய தேவையற்ற நிலைபாட்டிலிருந்து மாற்றம் பெறுங்கள்.


🌾 இன்றைய பண்புப்பயிற்சி


🌾 இது நடந்தே தீரவேண்டும், இதுதான் எனக்கு பிடிக்கும், என்ற பிடிவாத குணத்தை அறவே விட்டுத்தள்ளுங்கள். பிடிவாதத்தினால் வாழ்க்கை பெரிதும் துன்பத்திற்கும் இன்னல்களுக்கும் ஆளாகிவிடும் என்ற உண்மையை உணருங்கள். எது எப்படி இருந்தாலும் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் பண்பில்  நாம் உயர்வு பெற கற்றுக்கொள்ள வேண்டும். அப்போது தான் நம்முடைய வாழ்க்கையை நாம் வாழ முடியும். வாழ்க வளமுடன்...      


🌾 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🌾 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 


      🌸வாழ்க வையகம்🌸

   🍁வளர்க வேதாத்திரியம்🍁

      🌸வாழ்க வளமுடன்🌸


Comments