வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
மார்ச் 15
🍁⛳🍁⛳🍁⛳🍁⛳🍁⛳🍁
🔰 இன்றைய நித்தியக்கடன்
🔰 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🔰 இன்றைய சாதகம்
🔰 சனிக்கிழமை காலை:- சாந்தி தவம் மாலை:- நித்தியானந்த தவம்.
🔰 இன்றைய நற்சிந்தனை
🔰 ஒரு பழத்தை எடுத்து ஆய்வு செய்து பாருங்கள். அது எவ்வகையான பழமாக இருந்தாலும் அது கடந்துவந்த அனுபவத்தை ஆராய்ச்சி செய்யுங்கள். இவ்வாறு பழத்துக்குள் விதையாக இருந்து மண்ணுக்குள் புதைந்து மரமாகி, பூவாகி, காயாகி, வந்திருக்கிறது . இது கடந்து வந்த பாதையை அனுபவத்தை சிந்தித்துப் பாருங்கள்.
🔰 இன்றைய தற்சோதனன
🔰 ஒரு பழத்திற்கு பின்னால் அது பழமாக உருவாவதற்கு எடுத்த முயற்சிகள் நிறைய இருக்கிறது. சாதாரணமானதாக இருந்து விட முடியாது. பல்வேறு விதமாகவும், எல்லா வழிமுறைகளிலும் முயற்சி நடந்திருக்கிறது. அது பல்வேறு பருவ காலங்களை கடந்து வந்திருக்கிறது. காற்றிலிருந்தும், வெப்பத்திலிருந்து, நீரிலிருந்தும், நிலத்திலிருந்தும் தான் உருவாவதற்கான சத்துக்களை எல்லாம் ஒன்று திரட்டிக் கொண்டு தன்னை உருவகப்படுத்தி முழுமுயற்சியோடு வெற்றி பெற்றது. ஒரு விதைக்குள் அடங்கி இருந்த பழமாக தன்னை உருவகப்படுத்திக் கொண்டது.
🔰 இன்றைய பண்புப்பயிற்சி
🔰 வெளியில் இருந்து பார்ப்பதற்கு எந்த ஒன்றும் சுலபமாகத் தான் தெரியும். அதனோடு ஒன்றி கலந்து பயணித்து பாருங்கள். அவை எடுத்த முயற்சிகள், அவை சந்தித்த போராட்டங்கள் அனைத்துமே அதன் அதன் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்திருக்கும். முயற்சியும், போராட்டமும் இல்லாமல் எதுவும் கிடையாது. நமக்கான ஞானத்தில் நாம் வாழ்வதற்கு விடாமுயற்சி எனும் பண்பில் சிறந்து விளங்க வேண்டும் அப்போதுதான் ஞானவிதை முளைக்கத் துவங்கும். வாழ்க வளமுடன்...
🔰 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🔰 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment