வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
மார்ச் 14
🏮❄️🏮❄️🏮❄️🏮❄️🏮❄️🏮
♻️ இன்றைய நித்தியக்கடன்
♻️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
♻️ இன்றைய சாதகம்
♻️ வெள்ளிகிழமை இன்று காலை, மாலை இரண்டு வேளையும் சாந்தி தவம்.
♻️ இன்றைய நற்சிந்தனை
♻️ ஒரு குதிரை வண்டியில் பூட்டப்பட்ட அந்த குதிரையை ஓட வைப்பதற்காக புல்லுக்கட்டை கட்டி தொங்க விடுவார்கள். புல்லை திண்பதற்காக அந்த குதிரை ஓடத் துவங்கும். அது ஓடிக் கொண்டே இருக்க வேண்டியதுதான், அதற்கு புல்லுக்கட்டு கிடைக்கப்போவதே இல்லை. இதுபோலத்தான் பணத்தை தேடி ஓடுகிறீர்கள். ஒரு காலகட்டத்துக்கு பின்னால் திரும்பிப் பார்த்தால் எந்த உறவுகளும், நண்பர்களும் இல்லாமல் நீங்கள் மட்டும் தனியாக இருப்பீர்கள். பணம் என்பது ஒரு மாய வலை இந்த வலையில் சிக்கிக்கொள்ளாமல் லாவகமாக அதனை கையாளக்கூடிய முறையை உணர்வதற்கு தவம் செய்யுங்கள்.
♻️ இன்றைய தற்சோதனன
♻️ இந்த உலகத்திலேயே மிகவும் மோசமான போதைப்பொருள் பணம். பணத்தினுடைய குணநலன் தெரியாமல் அதனை கையாளும் போது, நம்மை அது கபளீகரம் செய்து விடுகிறது. நமக்கே தெரியாமல் நாம் பணத்திற்கு அடிமையாகி விடுகிறோம். ஞான பணம், நோய் பணம், அருள் பணம், ஆரோக்கிய பணம் என்று பணத்தில் பல்வேறு வகை உண்டு. அதனை தற்சோதனை செய்யுங்கள். அதனுடைய ஆழ, அகல, நீளத்தை, கபட நாடகத்தை புரிந்துகொள்ளுங்கள்.
♻️ இன்றைய பண்புப்பயிற்சி
♻️ மனதை நாம் எதன் மீது செலுத்துகிறோமோ, மனம் அதுவாகிறது. அழிந்து போகக் கூடிய பொருட்ளின் மீது மனதை செலுத்தும்பது கணத்துக்கு கணம், நிமிடத்திற்குநிமிடம், காலத்திற்குக்காலம் மனமும் அதோடு சேர்ந்து அழிகிறது. அழியாத பொருள் மீது மனம் செலுத்துங்கள். மதிப்புமிக்க மனித வாழ்க்கையை உணர்ந்து கொண்டு அதில் வளர்ச்சி பெறும் பண்பில் உயர்வு பெறுங்கள். அழியாத பொருளாக இருப்பது எல்லாம் வல்ல தெய்வநிலை, சுத்தவெளி, மெய்ப்பொருள், இயற்கை எனும் பேராற்றல் இது மட்டுமேயாகும். வாழ்க வளமுடன்...
♻️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
♻️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment