நித்தியக்கடன் மார்ச் 10 2025

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

மார்ச் 10


🧩🔘🧩🔘🧩🔘🧩🔘🧩🔘🧩


🪻 இன்றைய நித்தியக்கடன்


🪻 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக. 


🪻 இன்றைய சாதகம் 


🪻 திங்கட்கிழமை 

காலை:- கண்ணாடிப் பயிற்சி, 

பஞ்சேந்திரிய தவம், 

மாலை:- நித்யானந்த தவம்.


🪻 இன்றைய நற்சிந்தனை 


🪻 எப்போதும் நம் உடல் மீதும், உயிர் மீதும், மனம் மீதும் கவனமாக இருக்க வேண்டும். அடிக்கடி இந்த கவனிப்பு பயிற்சியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளும் போது விழிப்பு நிலை உண்டாகும். இந்த விழிப்பு நிலை பதிவுகளோடு தவம் செய்யச் செய்ய நாளுக்குநாள் ஆழ்நிலை தவமும், உள்ளுணர்வும் கிட்டும். இவைகளின் மொத்த விளைவாக இறைநிலையின் தன்மாற்ற ரகசியங்களை தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும்...


🪻 இன்றைய தற்சோதனன


🪻 வாழ்க்கையில் தேவையற்ற செயல்கள், எண்ணங்கள், பேச்சுக்கள், தேவைகள் இவைகளையெல்லாம் படிப்படியாக குறைத்துக் கொண்டு அன்றாட வாழ்க்கையில் நாம் இந்த உடலையும், உயிரையும், மனதையும் எப்படி பயன்படுத்துகிறோமோ அதைப் பொறுத்து தவ வாழ்வில் நமக்கு அனுபவங்கள் ஏற்படும். இறைஞான அனுபவத்தை பெறுவதற்காகவே இந்த உடல் அமைந்த போதும், அதற்கு தகுந்த செயல் பண்புகள் என்பது மிகவும் முக்கியமானது.


🪻 இன்றைய பண்புப்பயிற்சி


🪻 எல்லா வகையிலும் நம்மை நாமே கவனித்து, இறை ஞானத்திற்குறிய செயல் பண்புகளோடு வாழும்போது, நம்முடைய வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு நகருகிறது. புலன் மயக்கத்தில் வாழ்ந்த நம்முடைய பழைய வாழ்க்கையிலிருந்து புதிய ஞானப்பாதை உதயமாகும். இந்த ஞானப்பாதையில் நாம் பயணிக்க வேண்டுமானால், நாள் தவறாமல் மனவளக்கலை பயிற்சிகளை எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி நாள் தவறாமல் செய்துவரவேண்டும். சுய லாபத்தின் வெளிப்பாடு எதிர்பார்ப்பாகும். வாழ்க வளமுடன்...      


🪻 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🪻 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 


      🌸வாழ்க வையகம்🌸

   🍁வளர்க வேதாத்திரியம்🍁

      🌸வாழ்க வளமுடன்🌸

Comments