நித்தியக்கடன் நவம்பர் 28 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

நவம்பர் 28


💢♻️💢♻️💢♻️💢♻️💢♻️💢


🌀 இன்றைய நித்தியக்கடன்


🌀 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக. 


🌀 இன்றைய சாதகம் 


🌀 வியாழக்கிழமை 

காலை:- தீபப்பயிற்சி, துரியதவம், 

மாலை:- இறைநிலைதவம்.


🌀 இன்றைய நற்சிந்தனை 


🌀 நல்லதை பேசுதல், நல்லதை எண்ணுதல், நல்லதை சிந்தித்தல் வேண்டும். தவப்பயிற்சியின் மூலமாக நுண்ணிய நிலைக்கு மனதை இயக்கி பழகிய நாம், எதிர்மறையான சிந்தனைகளை ஊக்குவிக்கக் கூடாது. ஓரளவு உண்மை புரிந்து கொண்ட நாமே வருத்தம், கவலை, அச்சம், கோபம் என்று இவைகளில் சிக்கிக் கொண்டால் எதுவுமே அறியாத பாமர மக்கள் பாவம் அவர்கள் என்ன செய்வார்கள். தானும் பயந்து மற்றவர்களையும் பயமுறுத்தி, மறைமுகமாக அவர்களுக்குள் அச்சத்தை ஏன் தூண்ட வேண்டும்.


🌀 இன்றைய தற்சோதனன


🌀 நாம் வருத்தம், கவலை, அச்சம், கோபம் கொண்டால் இவைகளுக்கு வலிமை அதிகம். சாதாரண மக்களை இந்த காந்த அலைகள் சுலபமாக தன்வயப்படுத்தி கொண்டு, அவர்களுக்குள் பெரியதொரு தீய விளைவுகளை சுலபமாக ஏற்படுத்தி விடும். மறைமுகமாக அவர்கள் வாழ்க்கையில் நாம் இத்தகைய விபத்துக்களை ஏற்படுத்த வேண்டுமா?... சிந்தித்து பாருங்கள் அச்சமின்றி ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனை இவைகளில் ஆழமாக உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.


🌀 இன்றைய பண்புப்பயிற்சி


🌀 பதறாத காரியம் சீதளமடையாது. பதட்டத்துடன் வாழ்வது என்பது தேவை இல்லை. இத்தகைய சூழ்நிலை நமக்கும் நம்மை சுற்றி உள்ளவர்களுக்கும் பேராபத்தை விளைவித்து விடும். எதுவானாலும் இறை இயக்க நீதியின் அடிப்படையில் சரியாகவே நடைபெறுகிறது, என்ற உண்மையை ஆய்வுசெய்து அதனுடைய பின்புலத்தை புரிந்து கொள்ளுங்கள். செயலுக்குத் தக்க விளைவு என்பது வந்தே தீரும். இறை இயக்கத்தை வாழ்த்துவோம். வாழ்க வையகம் வாழ்க வளமுடன்...         


🌀 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🌀 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 


      🌸வாழ்க வையகம்🌸

   🍁வளர்க வேதாத்திரியம்🍁

      🌸வாழ்க வளமுடன்🌸

Comments