நித்தியக்கடன் நவம்பர் 27 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

நவம்பர் 27


♨️🥏♨️🥏♨️🥏♨️🥏♨️🥏♨️


🍁 இன்றைய நித்தியக்கடன்


🍁 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக. 


🍁 இன்றைய சாதகம் 


🍁 புதன்கிழமை 

காலை:-  ஒன்பது மையம், 

மாலை:- நித்யானந்தம்.


🍁 இன்றைய நற்சிந்தனை 


🍁 இறை நீதிக்கு முரண்பாடு இல்லாமல் முதலில் நம்மை நாம் ஒழுங்கமைத்துக் கொள்ள வேண்டும். இந்த நீதியின் அடிப்படையில் நம்முடைய எண்ணம், சொல், செயல்களை திட்டமிட்டு எப்போதும் விழிப்பு நிலையோடு இருந்து செயலாற்ற வேண்டும். இறைநீதி என்பது தனக்கோ, பிறருக்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, உடலுக்கோ, மனதிற்கோ, துன்ப விளைவுகளை ஏற்படுத்திக் கொள்ளாமல் தனது எண்ணம், சொல், செயல் பயன்படுத்துதலே ஆகும்.


🍁 இன்றைய தற்சோதனன


🍁 இந்த நீதிக்கு முரண்பாடான மற்றவர்களுடைய எண்ணத்தை, செயலை, பேச்சுக்களை அவர் அவர்களிடமே விட்டு விடலாம். அவைகளை தூக்கி சுமந்து கொண்டு நாம் துன்பப் பட வேண்டிய அவசியம் இல்லை. உறவுகளிடையே நல்லதொரு நட்பும், நீதிநெறியும், காப்பாற்றப்பட வேண்டுமானால் இந்த இறை நீதியை ஏற்றுக் கொண்டு வாழ்ந்தால் போதுமானது, மற்றபடி இதற்கு முரண்பாடான கருத்துக்கள் உருவாகும் போது, அதை அவர் அவர்களிடமே விட்டு விடலாம்.


🍁 இன்றைய பண்புப்பயிற்சி


🍁 தான் நீதி பிறழாது வாழ்வது பிறருடைய பிழைகளைப் பொறுத்துக் கொள்ளுதல், என்பதைவிட மிகவும் முக்கியமாக நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று அவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் செய்வது நியாயமாகவே கருதப்படுகிறது. ஏனெனில் அவர்களுடைய கருவமைப்பு, தன்மை, அறிவின் உயர்வு இதற்கு தக்கவாறுதான் அவர்கள் அந்த செயல்களைச் செய்கிறார்கள். இறைநீதி என்னவெனில். தான் பிழையில்லாமல் சீரான அறிவுஉயர்வோடு வாழ்வதே ஆகும். இந்த பண்பில் அனைவரும் விழிப்பு நிலையோடு இருந்து உயர்வோம். வாழ்க வளமுடன்...       


🍁 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🍁 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 


      🌸வாழ்க வையகம்🌸

   🍁வளர்க வேதாத்திரியம்🍁

      🌸வாழ்க வளமுடன்🌸

Comments