நித்தியக்கடன் நவம்பர் 25 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

நவம்பர் 25


🎱💥🎱💥🎱💥🎱💥🎱💥🎱


🔮 இன்றைய நித்தியக்கடன்


🔮 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக. 


🔮 இன்றைய சாதகம் 


🔮 திங்கட்கிழமை 

காலை:- கண்ணாடிப் பயிற்சி, 

பஞ்சேந்திரிய தவம், 

மாலை:- நித்யானந்த தவம்.


🔮 இன்றைய நற்சிந்தனை 


🔮 கடலின் ஓரத்தில் அலைகள் இருந்துகொண்டேதான் இருக்கும். அலை ஓயட்டும் அதன்பின் கடலுக்குள் இறங்கலாம் என்று நினைத்தால், அலை எப்பொழுது ஓய்வது நாம் எப்போது கடலுக்குள் செல்வது. அலை ஓயப்போவதுமில்லை, நாம் கடலுக்குள் செல்ல போவதும் இல்லை. அந்தந்த வயதில் அந்தந்த பணிகளை செவ்வனே செய்து சிறப்பு பெறவேண்டும். உடல் ஆரோக்கியமாக இருக்கும் போதே உடலைப் பற்றியும், மனதைப் பற்றியும்,இறைவனைப் பற்றியும் தெரிந்து கொள்ளக் கூடிய தேடல், வாழ்க்கையை முழுமை படுத்தும்.


🔮 இன்றைய தற்சோதனன


🔮 சிந்தையை ஒருமுகப்படுத்திக் கொண்டு வைராக்கியத்தோடு, உயிரைப் பற்றிய தேடலில் வெற்றி பெறவேண்டும். நம்முடைய உயிரை பற்றி நாம் தெரிந்து கொள்ளாமல் போனால் வாழ்க்கையை முழுமையாக வாழ முடியாது. ஏனென்றால் உயிரே அனைத்துக்கும் மூலமாகவும், உயிரியக்கமே அனைத்து இயக்கமாகவும் இருக்கிறது. எல்லா வகையிலும் தற்சோதனை செய்து உண்மையை உணர்வோம்.


🔮 இன்றைய பண்புப்பயிற்சி


🔮 உள்ளதை உள்ளவாறு உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த பண்பில் உயர்வு பெறும் போது தான் நம்மிடம் இருக்கக்கூடிய, கற்பனையான எண்ணங்கள், தேவையில்லாத தேவையற்ற செயல்பாடுகள் அனைத்தையும் ஒழுங்கு செய்ய முடியும். உள்ளதை உள்ளவாறு உணர்வோம் வாழ்வை வளமாக வாழ்வோம். வாழ்க வளமுடன்...     


🔮 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🔮 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 


      🌸வாழ்க வையகம்🌸

   🍁வளர்க வேதாத்திரியம்🍁

      🌸வாழ்க வளமுடன்🌸


Comments