நித்தியக்கடன் டிசம்பர் 18 2024

 ♨️🌿♨️🌿♨️🌿♨️🌿♨️🌿♨️


*வாழ்க வையகம்*

*வளர்க வேதாத்திரியம்*

*வாழ்க வளமுடன்*

*நித்தியக்கடன்*

*டிசம்பர் 18*


♨️🌿♨️🌿♨️🌿♨️🌿♨️🌿♨️


⛳ *இன்றைய நித்தியக்கடன்*


⛳ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக. 


⛳ *இன்றைய சாதகம்* 


⛳ புதன்கிழமை 

காலை:-  ஒன்பது மையம், 

மாலை:- நித்யானந்தம்.


⛳ *இன்றைய நற்சிந்தனை* 


⛳ மகாபாரதத்தில் சிசுபாலன் என்ற கதாபாத்திரம். இந்த சிசுபாலனுக்கு கிருஷ்ணனின் கையால் தான் மரணம் என்பதை விதிக்கப்டட்ட விதியாகும். இதனை தெரிந்து கொண்ட சிசுபாலனின் தாய் ஓடிச்சென்று கிருஷ்ணனிடம் ஒரு வரம் கேட்கிறார். என் மகனை நீ உன் கையால் கொள்ளமாட்டேன் என்று வரம் கொடு. அதற்கு கிருஷ்ணன் அது இயலாது, வேண்டுமென்றால் இப்படி செய்யலாம் என்றார். சிசுபாலன் செய்கின்ற நூறு தவறுகளை நான் மன்னித்து விடுகிறேன். அதுவரை நான் அவனை கொல்ல மாட்டேன் என்று வரம் கொடுத்தார். சிசுபாலனின் தாய் சிறிய வயதிலிருந்தே அவருக்கு இந்த கதையை சொல்லித்தான் வளர்த்திருக்கிறார். ஆனாலும் சிசுபாலனினுடைய துர்க்குணம் அவரை மேலும் மேலும் தவறுகள் செய்ய தூண்டுகிறது. நூறு தவறுகள் செய்யும் வரை அமைதியாக இருந்த கிருஷ்ணன் சிசுபாலன் நூத்திஒன்றாவது தவறை செய்து முடித்த அடுத்த கணம், தன்னுடைய கையிலிருந்த சக்கரத்தை பிரயோகப்படுத்தி சிசுபாலனை தண்டித்து விடுகிறார்.


⛳ *இன்றைய தற்சோதனன*


⛳ பாவத்தின் உச்சகட்டத்திற்கு வந்து விட்டபோது இயற்கை மனிதனை அழித்து விட்டது. இந்த கதையிலிருந்து நாம் தற்போது நடக்கும் விஷயத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் ஒரு உண்மை புரியும். உன்னுடைய பாவகோப்பை எப்போது நிரம்புகிறதோ அதுவரை நீ! மன்னிக்க படுவாய். இந்த வாசகத்தை இயேசுபிரான் பைபிளில் குறிப்பிடுகிறார். இந்த பூமியில் மனிதர்கள் செய்யும் பாவங்கள் நிரம்பிவிட்டது. அதனால் இயற்கை அதனை கழுவி தூய்மை செய்து கொள்ளும் காலகட்டத்தில், இது போன்ற பல்வேறு அசம்பாவிதங்களை உயிரிழப்புகளை பல வடிவங்களில் நாம் சந்திக்க வேண்டியதாக உள்ளது.


⛳ *இன்றைய பண்புப்பயிற்சி*


⛳ இவ்வளவு காலம் பொறுமையாக அமைதியாக இருந்த இயற்கை, இந்த மனிதர்கள் செய்கின்ற அத்தனை தவறுகளையும் மன்னித்து கொண்டிருந்த இயற்கை, இன்று அந்த அமைதியை மௌனத்தை கலைத்து கொண்டு, உலக மக்களின் பாவங்களுக்கு தீர்ப்புகளை எழுதிக் கொண்டிருக்கிறது. எப்படி வாழ வேண்டும் என்று தெரிந்திருந்தும் அப்படி மனிதர்கள் வாழாமல், தவறுகளையும் பாவங்களையும் செய்து தன்னை தானே தண்டனைக்கு உட்படுத்திக் கொண்டு, மனிதர்களின் வாழ்க்கை ஊசலாடிக் கொண்டிருக்கிறது. இறப்புக்கும் பிறப்புக்கும் இடைப்பட்ட இந்த மனித வாழ்க்கையின், உண்மை தன்மையை உணர்ந்து கொண்டு இயற்கையை மதித்து வாழ்வோம். எல்லாவகையிலும் எல்லாவழியிலும் வாழ்க வளமுடன்...          


⛳ *குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*


⛳ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.*


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 


      *🌸வாழ்க வையகம்🌸*

   *🍁வளர்க வேதாத்திரியம்🍁*

      *🌸வாழ்க வளமுடன்🌸*


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments