நித்தியக்கடன் டிசம்பர் 08 2024

 🍁🧊🍁🧊🍁🧊🍁🧊🍁🧊🍁


*வாழ்க வையகம்*

*வளர்க வேதாத்திரியம்*

*வாழ்க வளமுடன்*

*நித்தியக்கடன்*

*டிசம்பர் 08*


🍁🧊🍁🧊🍁🧊🍁🧊🍁🧊🍁


♻️ *இன்றைய நித்தியக்கடன்*


♻️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக. 


♻️ *இன்றைய சாதகம்* 


♻️ திங்கட்கிழமை 

காலை:- கண்ணாடிப் பயிற்சி, 

பஞ்சேந்திரிய தவம், 

மாலை:- நித்யானந்த தவம்.


♻️ *இன்றைய நற்சிந்தனை* 


♻️ வரலாறு மிகவும் முக்கியம். வரலாறு பலவகைப்படும் தேச வரலாறு, மொழி வரலாறு, பண்பாட்டு வரலாறு, கலை வரலாறு, தொழில் வரலாறு, கணித வரலாறு, விஞ்ஞான வரலாறு, மெய்ஞான வரலாறு, நீர்வள வரலாறு, தாவர வரலாறு, உயிர் வரலாறு, நெருப்பு வரலாறு, காற்று வரலாறு நட்சத்திர வரலாறு, கோள்கள் வரலாறு, பிரபஞ்ச வரலாறு, இறைநிலை வரலாறு என்று பலவகையான வரலாறுகள் இந்த அண்டத்திலும், பிண்டத்திலும் இருக்கிறது. இந்த அனைத்து வரலாற்றியும் உள்ளடக்கிய ஒட்டுமொத்த வரலாறு மனித வரலாறு மனிதனின் கருமைய வரலாறு...


♻️ *இன்றைய தற்சோதனன*


♻️ இந்த பிரபஞ்சத்தின் மையத்தில் இருக்கக்கூடிய கருந்துளைக்கும் மனித கருமையத்திற்கும் நேரடியாக தொடர்பு உண்டு. எந்த ஒன்று சுழன்றாலும் அதற்கு மையம் அமைந்துவிடும். அந்த மையத்தில் இருப்பது தெய்வீக பேராற்றல், கரும்பொருள். ஒவ்வொரு அணுவில் உள்ள கரும்பொருளுக்கும், ஒவ்வொரு உயிரின் கருமையத்திற்கும், பிரபஞ்ச கருந்துளைக்குள் நேரடியாக தொடர்பு உண்டு. இந்த தொடர்பை முறையான பயிற்சி மூலம் அனுபவம் பெறவே உருவானது யோகப் பயிற்சிகள், யோகவரலாறு...


♻️ *இன்றைய பண்புப்பயிற்சி*


♻️ இந்த வரலாற்று உண்மைகளை அனுபவமாக்கிக் கொள்ள வேண்டுமானால், மனதின் வழியாக கருந்துளைக்குள் பயணம் செய்யவேண்டும். இந்த பயணத்தின் முடிவு இறைஞானம் அறிவின் முழுமை பேற்று. இப்பேறு பெறுவதற்கே இந்த மனித தோற்றம் உருவானது. இவை அனைத்தும் நம்முடைய சொந்தகதை நம்முடைய சொந்த வரலாறு. இந்த வரலாற்று உண்மைகளை நாம் கடந்து வந்த பாதையை பின்னோக்கி சென்றுதான் அனுபவமாக்கிக் கொள்ள வேண்டும். இதுவே இறை சட்டம் இறைநிலையின் தன் மாற்ற சரித்திர வரலாற்றில், நாம் ஒரு பகுதி என்ற உண்மையை உணர்வோம். வாழும் பண்பில் உயர்வோம். வாழ்க வளமுடன்...           


♻️ *குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*


♻️ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.*


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 


      *🌸வாழ்க வையகம்🌸*

   *🍁வளர்க வேதாத்திரியம்🍁*

      *🌸வாழ்க வளமுடன்🌸*


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments