வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஜனவரி 07
💦🎨💦🎨💦🎨💦🎨💦🎨💦
🎱 இன்றைய நித்தியக்கடன்
🎱 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🎱 இன்றைய சாதகம்
🎱 செவ்வாய்கிழமை
காலை:- துரியாதீததவம்,
மாலை:- இறைநிலை தவம்.
🎱 இன்றைய நற்சிந்தனை
🎱 ஞானம் என்றால் அறிவை அறிந்த தெளிவே ஞானமாகும். அறிவாக இருக்கும் பொருளையும் அறிவையும் உணர்ந்த நிலை. இந்த அறிவு திறந்த நிலையில் இருக்க வேண்டும். மூடிய நிலையில் இந்த அறிவு இருக்கக் கூடாது. மூடப்பட்ட நிலையில் இருக்கும் அறிவை திறந்துகொண்டு தெளிந்த மனோநிலையோடு வாழ வேண்டும். இதுவே ஞானம் என்று உபதேசிக்கப்பட்டது. இந்த ஞானக் கண்ணை திறந்து கொள்ள வேண்டும். மூடநம்பிக்கை என்ற வார்த்தையை சிந்தனை செய்து பார்ப்போம் மூடி இருக்கக்கூடிய நம்பிக்கை, மூடி இருக்கக் கூடிய உண்மை இதுவே காலப்போக்கில் அறியாமை செயல்களுக்கு உவமை வார்த்தை மாற்றப்பட்டுவிட்டது. உண்மையில் மூடநம்பிக்கை என்ற வார்த்தைக்கு மூடி இருக்கக்கூடிய உண்மைகள் என்ற அர்த்தமே பொருத்தமானதாக இருக்கும்.
🎱 இன்றைய தற்சோதனன
🎱 மூடி இருக்கக்கூடிய உண்மை என்றால், என்ன? உண்மை அதற்குள் இருக்கிறது. புலன்களைக் கடந்து அனுபவம் ஆக்கிக் கொள்ள வேண்டிய நிலை. இந்த நிலையை உணர்ந்து கொள்வதே ஞானமாகும். இந்த ஞானத்திற்குள் இருக்கக்கூடிய உண்மைகள், மூடி இருக்கக்கூடிய உண்மை மறைபொருளாக இருக்கும் இறைநிலையையும், இறைநிலையினுடய நிகழ்ச்சிகளையும் உணர்ந்து கொள்வது. மூடியிருக்கும் உண்மை, பூடகமாக இருக்கும். உண்மை இந்த அறிவைக் கொண்டு தான் அறிந்து கொள்ள முடியும். இந்த உண்மையை அறிவுக் கண்ணால் திறந்து கொண்டால்தான் உணர முடியும். இந்த நிலைக்கு நம்மை உயர்த்திக் கொள்ள முறையானபயிற்சியும், முறையானமுயற்சியும் தேவை. தற்சோதனை சிறுகசிறுக நம்மை இந்நிலைக்கு உயர்த்துகிறது.
🎱 இன்றைய பண்புப்பயிற்சி
🎱 நமக்கு கிடைத்திருக்கக் கூடிய குருவின் மீதும் அவர் அன்போடு அருளிய பயிற்சி மீதும் நம்பிக்கை வேண்டும். இறைவனை உணர வேண்டுமானால் இந்த நம்பிக்கை என்ற தகுதி தேவை இந்த தகுதி இல்லாதவர்கள் இறைவனை உணர்ந்து கொள்ள முடியாது, குருவையும் புரிந்து கொள்ள முடியாது. பயிற்சி மீது குருவின் மீதும் தற்சோதனையோடு நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். இந்தப் பண்பு உங்களை ஞானத்திற்கு தகுதி உடையவராக உயர்த்தும் பண்பாகும். வாழ்க வளமுடன்..!
🎱 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🎱 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment