நித்தியக்கடன் ஜனவரி 05 2025

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

ஜனவரி 05


🏮🕳️🏮🕳️🏮🕳️🏮🕳️🏮🕳️🏮


🚥 இன்றைய நித்தியக்கடன்


🚥 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக. 


🚥 இன்றைய சாதகம் 


🚥 ஞாயிற்றுகிழமை 

காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம் 

மாலை:- இறைநிலை தவம்.


🚥 இன்றைய நற்சிந்தனை 


🚥 இந்த உலகில் நடைபெறக்கூடிய இந்த சம்பவத்திற்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, என்று எந்த ஒரு தனிநபரும் நினைக்கலாம். ஆனால் அது உண்மையல்ல. அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ஒவ்வொரு தனிமனிதரும் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புடையவர்களே. பிரபஞ்ச காந்த இயக்கத்தின் அடிப்படையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து இருக்கிறோம். ஒருவரோடு ஒருவர் காந்தத்தின் மூலம் தொடர்பு படுத்தப்பட்டு இருக்கிறோம். மனிதர்கள் ஒவ்வொரு வரும் உடலளவில் தனியாக இருக்கிறார்களெதவிர, அவர்கள் அனைவரும் காந்தத்தால் ஒருங்கிணைக்கப்பட்டு இயங்குகிறார்கள்...


🚥 இன்றைய தற்சோதனன


🚥 நன்மையாக இருந்தாலும் தீமையாக இருந்தாலும், நாம் ஒன்றை எண்ணி விட்டோமே ஆனால், அது இந்த பிரபஞ்ச வான்காந்த களத்தில் பதிவு பெறுகிறது. இந்த பதிவானது செயல்படுவதற்கு, உரிய காலத்தை உரிய நபரை எதிர்நோக்கி காத்திருக்கும். நன்மையும், தீமையும் இவ்வுலகில் நடைபெறுவதற்கு ஒவ்வொரு, மனிதர்களுடைய எண்ண பதிவும் தூண்டுதலாக அமைகிறது. இந்த பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதருக்கும் பொறுப்பும் கடமையும் அதிகம் இருக்கிறது. விளையாட்டாக எதையும் எண்ணி விடவும் கூடாது, செயலை செய்து விடவும் கூடாது.


🚥 இன்றைய பண்புப்பயிற்சி


🚥 மேலே கூறப்பட்டு இருக்கக்கூடிய அனைத்து உண்மைகளையும், அவரவர்கள் உணர்ந்து கொள்வதற்கு மனப் பயிற்சியில் தங்களை தாங்களே, ஆர்வத்தோடு ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இந்த ஆர்வம் ஒன்று தான் தன்னுடைய பொறுப்பையும், இந்த பிரபஞ்ச ரகசியங்களையும் தெளிவாக அவர்களுக்குள் அனுபவமாகவே உணரச்செய்யும். அத்தகைய சிறப்புமிக்க பயிற்சியே மனவளக்கலையாகும். "நான் எனது வாழ்நாளில், யாருடைய உடலுக்கும், மனதுக்கும், துன்பம் தரமாட்டேன். துன்பப்படுவோருக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன்". வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!...       


🚥 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🚥 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 


      🌸வாழ்க வையகம்🌸

   🍁வளர்க வேதாத்திரியம்🍁

      🌸வாழ்க வளமுடன்🌸

Comments