நித்தியக்கடன் டிசம்பர் 03 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

டிசம்பர் 03


 🪻⚡🪻⚡🪻⚡🪻⚡🪻⚡🪻


🚥 இன்றைய நித்தியக்கடன்


🚥 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக. 


🚥 இன்றைய சாதகம் 


🚥 செவ்வாய்கிழமை 

காலை:- துரியாதீததவம், 

மாலை:- இறைநிலை தவம்.


🚥 இன்றைய நற்சிந்தனை 


🚥 அவர் அவர்களுக்கு தொழில் சார்ந்த அறிவும், இயற்கை சார்ந்த அறிவும், நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போக வேண்டும். இது ஒரு நாளும் ஒரு பொழுதும் தேக்கமாகிவிடக்கூடாது. இது யாருக்கெல்லாம் தேக்கமாகிறதோ, வளர்ச்சி பெறவில்லயோ அவர்களால் அவர்கள் சார்ந்த தொழிலும், இயற்கை வாழ்வியல் முறையிலும் சிறந்து விளங்க முடியாது. ஆக்க சக்தி என்பதும், அறிவு என்பதும், எங்கும் எப்போதும் எதிலும் தேக்கமில்லாமல் இயங்கி பல்கிப் பெருகுவதே ஆகும்.


🚥 இன்றைய தற்சோதனன


🚥 நம்முடைய வாழ்க்கை சூழ்நிலை ஒரே மாதிரியாக அப்படியே இருக்கப்போவது இல்லை. விஞ்ஞான வளர்ச்சியும் அப்படியே இருக்கப் போவதில்லை. இவையெல்லாம் வளர்ந்து கொண்டே தான் இருக்கும். அதற்கு ஏற்றார் போல நம்முடைய அறிவையும், சிந்தனையையும் உயர்த்திக் கொள்ள வேண்டும். இதுவே ஒரு வெற்றிகரமான வாழ்க்கை முறையாகும். தற்சோதனை இந்த அறிவு உயர்வுக்கு முழுமையாக பயன்படும். எல்லா வாழ்க்கை சூழ்நிலையையும் தற்சோதனை செய்யுங்கள். வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்வதற்கு  தற்சோதனை ஒன்றே நமக்கு கிடைத்திருக்கும் அற்புதமான வாய்ப்பாகும்.


🚥 இன்றைய பண்புப்பயிற்சி


🚥 கால நிலைகளுக்கு ஏற்ப நம்மை அறிவில் உயர்த்திக் கொள்ளும் பண்பில், எப்போதும் நாம் தயாராகவே இருக்க வேண்டும். இதிலிருந்து ஒருபோதும் பின்வாங்கி விடக்கூடாது. காலநிலை நம்மை எப்படி வேண்டுமானாலும் மாற்றக்கூடியது. அதனை எதிர்கொள்வதற்கு நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். அப்போதுதான் இந்த மாற்றங்களில் இருந்தும் நம்மை நாம் தற்காத்து தக்க வைத்துக் கொள்ள முடியும். நல்ல நிலைபாட்டிலும், பண்பிலும் உயர்வு பெறுவதே மனிதப் பிறவியின் நோக்கமாகும். வாழ்க வளமுடன்...            


🚥 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🚥 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 


      🌸வாழ்க வையகம்🌸

   🍁வளர்க வேதாத்திரியம்🍁

      🌸வாழ்க வளமுடன்🌸


Comments