நித்தியக்கடன் டிசம்பர் 02 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

டிசம்பர் 02


 💦🕸️💦🕸️💦🕸️💦🕸️💦🕸️💦


🕳️ இன்றைய நித்தியக்கடன்


🕳️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக. 


🕳️ இன்றைய சாதகம் 


🕳️ திங்கட்கிழமை 

காலை:- கண்ணாடிப் பயிற்சி, 

பஞ்சேந்திரிய தவம், 

மாலை:- நித்யானந்த தவம்.


🕳️ இன்றைய நற்சிந்தனை 


🕳️ புறத்தூய்மை அகத்தூய்மை என்று தூய்மை இரண்டு வகைப்படும் புறத்தூய்மை என்பது நம் உடுத்தும் உடைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல், மேலும் உடல்மீது அழுக்கு இல்லாமல் சுத்தமாக பராமரித்தல், அன்றாட நம் செயல்கள் வழியாக சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ளுதலாகும். அகத் தூய்மை என்பது நல்லதை எண்ணுதல் உடற்பயிற்சி காயகல்பம் தவம் தற்சோதனை இவைகளை எல்லாம் செய்து உடலுக்குள் இருக்கும் உள் உறுப்புகளையும் செல்களையும் 80 சதவீதத்திற்கு மேல் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுதல் குறிப்பாக சொல்ல வேண்டுமானால் சீவகாந்த திணிவோடும் அடர்த்தியோடும் இருப்பதாகும்.

 

🕳️ இன்றைய தற்சோதனன


🕳️ இவ்வாறாக நாம் நம்மையும் நம்மை சார்ந்தவர்களையும் இந்த பூமியையும் கவனத்தோடு பார்த்து கொள்வோமேயானால் எந்த ஒரு காலத்திலும் இந்த பூமியில் ஏற்படக்கூடிய அசௌகரிய நிலையிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும் சுகாதாரமாக இருந்தால் எந்த ஒரு கிருமிகளும் நமக்குள் ஊடுருவி அது நோயாகவும் நோய் தொற்றும் மாறுவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு இனி வரும் சந்ததிகளுக்கு புறத்தூமையையும் அகத்தூய்மையும் வாழ்வியல் கல்வியாக வாழ்ந்து காட்டுவோம்.


🕳️ இன்றைய பண்புப்பயிற்சி


🕳️ ஏதோ ஒரு நாள் ஏதோ ஒரு நேரம் சிறியதாக ஒரு தவறை நாம் செய்தால் அது என்ன பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தி விடவா போகிறது என்று அலட்சியமாக இருந்து விடக்கூடாது தனிமனிதனின் துவங்கி அலட்சியம் உலகத்தையே மிகப்பெரிய ஆபத்தின் அருகாமையில் கொண்டு சென்று நிறுத்தியுள்ளது ஆபத்தில்லாத மனிதவாழ்வும் அபாயமில்லாத இயற்கை சூழ்நிலையும் உருவாக இவ்வையகத்தையும் மானுடத்தையும் வாழ்த்துவோம். வாழ்க வளமுடன்...             


🕳️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🕳️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 


      🌸வாழ்க வையகம்🌸

   🍁வளர்க வேதாத்திரியம்🍁

      🌸வாழ்க வளமுடன்🌸


Comments