வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஜனவரி 01
🍄🌀🍄🌀🍄🌀🍄🌀🍄🌀🍄
💐 இன்றைய நித்தியக்கடன்
💐 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
💐 இன்றைய சாதகம்
💐 புதன்கிழமை
காலை:- ஒன்பது மையம்,
மாலை:- நித்யானந்தம்.
💐 அனைவருக்கும் உலக நல வேள்வி தின வாழ்த்துக்கள் மற்றும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
💐 இன்றைய நற்சிந்தனை
💐 அன்றன்று சேரக்கூடிய அழுக்கினை, கலங்கத்தினை அன்றன்றே சுத்தம் செய்வோம். நாம் உபயோகப்படுத்தும் பாத்திரத்தையோ, வாகனத்தையோ சுத்தமாக அன்றென்று துடைத்து கழுவி தூய்மையாக வைத்துக் கொண்டால் தான், அதனை அடுத்தடுத்த நாட்களுக்கு சிறந்த முறையில் பயன்படுத்த முடியும்.
💐 இன்றைய தற்சோதனன
💐 இது போன்றே இந்த பருவுடலும், நுண்ணுடலும், காந்தவுடலுமாகும். இவைகளில் கலங்கத்தை, கசடுகளை, அழுக்கை சேரவிடாதீர்கள். அப்படி விட்டு விட்டோமானால், அதிலிருந்து நாம் பெறுவது உடலில் நோய், மனதில் குழப்பம், வாழ்க்கையில் சிக்கல், இவைகளை தவிர்ப்பதற்க்கு அன்புகூர்ந்து தற்சோதனை செய்து அன்று, அன்று சுத்தம் செய்வீர், ஞான தேகம் செய்வீர்.
💐 இன்றைய பண்புப்பயிற்சி
💐 காலையில் செய்ய வேண்டிய பயிற்சி முறைகளையும், மாலையில் செய்ய வேண்டிய பயிற்சி முறைகளையும் செய்துவிட்டால் போதும். உயிரின் மீதும், காந்தத்தின் மீதும், உடல் செல்கள் மீதும் ஏற்பட்டிருக்கும் அழுக்கு நீக்கப்பட்டுவிடும். அன்றன்று செய்யும் பயிற்சியை அன்றன்றே செய்யும் பண்பில் உயர்வோம். காலம் யாருக்காகவும் காத்திருக்காது. இதற்கு யாரும், எவரும் விதிவிலக்கு அல்ல. வாழ்க வளமுடன்...
💐 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
💐 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment