நித்தியக்கடன் அக்டோபர் 30 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

அக்டோபர் 30


🌿🕳️🌿🕳️🌿🕳️🌿🕳️🌿🕳️🌿


🍥 இன்றைய நித்தியக்கடன்


🍥 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக. 


🍥 இன்றைய சாதகம் 


🍥 புதன்கிழமை 

காலை:-  ஒன்பது மையம், 

மாலை:- நித்யானந்தம். 


🍥 இன்றைய நற்சிந்தனை 


🍥 இந்த பிரபஞ்சம் பல்வேறு அற்புதங்களை உள்ளடக்கமாகக் கொண்டது. இந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு விதமான தன்மையும், தரமும், நுண்மையும், இயக்கமும், சிறப்புக்களும் வாய்ந்தது. நாம் அவைகளை எல்லாம் உணர்ந்து கொள்ள வேண்டுமானால், நாம் அதற்கு தகுந்த செயல் பண்புகளை வளர்த்துக் கொள்ளவேண்டும். எந்த அளவு நம்மை நாம் பண்படுத்திக் கொண்டு சிந்தித்து வாழ்கிரோமோ, அந்த அளவிற்கும் முறைக்கும் ஏற்ப இந்த பிரபஞ்சத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.


🍥 இன்றைய தற்சோதனன


🍥 நம் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய அனைத்து வகையான சிக்கல்களுக்கும், இன்னல்களுக்கும், இடர்பாடுகளுக்கும் தீர்வு இந்த பிரபஞ்சத்தில் இருக்கிறது. பிரபஞ்சத்தின் இயக்கமும் தனிச்சிறப்பும் எல்லா வகையான உயிரினங்களோடும் ஒன்றிணைக்கப்பட்டும், இந்த ஒருங்கிணைந்த நிலையில் தான் இயங்குகிறது. இதன்விளைவாக நாம் இந்த பிரபஞ்சத்தை உணர்ந்து கொள்வதில் எந்த ஒரு சிரமமும் இருக்காது. மீறி சிரமம் இருப்பதாக உணர்கிறோம் என்றால்,  அதற்கும் காரணம் கட்டாயம் இருக்கும்.


🍥 இன்றைய பண்புப்பயிற்சி


🍥 நம் கருமையத்தில் இருக்கக்கூடிய கர்மவினை பதிவுகளுக்கு ஏற்ப நாம் எடுக்கும் முயற்சிகளுக்கு, நமக்கு கிடைக்க வேண்டிய அனுபவங்கள் காலதாமதம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. பிரபஞ்சத்துக்கு உள்ளாக இருக்கக்கூடிய பொருள்களோடு இணைய வேண்டுமானால் நம் கருமையத்தில் அதற்கு தகுந்த தரமேம்பாடும், தன்மை மேம்பாடும் பெற வேண்டும். அப்போதுதான் ஜீவாத்மா பரமாத்மாவோடு இணைந்து பிரபஞ்ச அனுபவங்களை தனதாக்கிக் கொள்ள முடியும். அதுவரை பொறுமையாகவும் அமைதியாகவும் முயற்சி செய்வது நம் கடமையாகும். வாழ்க வளமுடன்...


🍥 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🍥 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 


      🌸வாழ்க வையகம்🌸

   🍁வளர்க வேதாத்திரியம்🍁

      🌸வாழ்க வளமுடன்🌸

Comments